க.பரமத்தி: பருவமழை பொய்ததன் காரணமாக, ஆவாரம் பூ, பூளைப்பூ, வேப்பிலை அடங்கிய கட்டினை விலை கொடுத்து வாங்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர்.
தமிழர்களின் தலையாய திருவிழாக்களில், தை மாதம் முதல்நாள் வரும் பொங்கல் பண்டிகை மிக முக்கியமானது. மார்கழி கடைசிநாளில் வரும் போகிப்பண்டிகையும், தை முதல்நாள் திருவள்ளுவர் தினமும், 2ம் நாள் உழவர் தினம் என, மூன்று நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.
போகிப்பண்டிகையையொட்டி, வீடுகள் அனைத்தும் வெள்ளையடிக்கப்பட்டு, காப்பு கட்டப்படுகின்றன. ஆவாரம்பூ, பூளைப்பூ, வேப்பிலையை ஒரு கட்டாக கட்டி, வீட்டு கூரையில் வைப்பது காப்பு எனப்படுகிறது. காப்புக்கு தேவையாக, ஆவாரம் பூ, பூளைப்பூ கிராமப்புறங்களில், பொட்டல் காடுகளில் இயற்கையாக முளைத்திருக்கும்.அவற்றை போகிக்கு முதல்நாள், பொதுமக்கள் பறித்து வைத்து, காப்பு கட்ட பயன்படுத்துவர். நடப்பாண்டு, பருவமழை பொய்த காரணத்தினால், ஆவாரம் பூ, பூளைப்பூ செடிகள் கருகி கிடக்கின்றன.
காசில்லாமல், இலவசமாக பூ பறித்து காப்பு கட்டும் பொதுமக்கள், ஆவாரம்பூ, பூளைப்பூ, வேப்பிலை கட்டினை, 10 ரூபாய் முதல், 15 ரூபாய் வரை விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.
காசு கொடுத்து கட்டிய "காப்பு'
தினமலர் – தி, 14 ஜன., 2013சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உதய் கிரண்
4 புகைப்படங்கள் - 17 மணிநேரம் முன்ஸ்ருதிஹாசன்
8 புகைப்படங்கள் - 17 மணிநேரம் முன்காவ்யா ஷெட்டி
4 புகைப்படங்கள் - 17 மணிநேரம் முன்சானாகான்
15 புகைப்படங்கள் - 17 மணிநேரம் முன்ஒளரங்கசீப்
13 புகைப்படங்கள் - 17 மணிநேரம் முன்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
ஆப்கான் கிரிக்கெட் கேப்டன் தந்தை கடத்தல்
தினமலர் - 3 மணிநேரம் முன்தற்கொலை செய்து கொண்ட காதல் மனைவி: வெப்கேமிராவில் பார்த்து கணவன் அதிர்ச்சி
தினமலர் - 4 மணிநேரம் முன்போலீசை தாக்கிய எம்.எல்.ஏ. மீது வழக்கு
தினமலர் - 4 மணிநேரம் முன்என்.எல்.சி., பங்குகளை விற்க கூடாது பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்
தினமலர் - 4 மணிநேரம் முன்திருமலையில் இனி பக்தர்கள் தங்க ரூம் கிடைப்பது சுலபம்
தினமலர் - 4 மணிநேரம் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
