கூடங்குளம் அணுமின் நிலையம் யாரும் தடுக்க முடியாது: வாசன்

திருவண்ணாமலை: கூடங்குளம் அணு மின் நிலையம் திறப்பதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது, என, மத்திய அமைச்சர் வாசன் கூறினார்.
ஆரணியில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழகத்தில் இப்போது நிலவி வரும் மின் பற்றாக்குறையால், மக்களிடையே கசப்புணர்வு ஏற்பட்டுள்ளது. மின் பற்றாக்குøறை போக்க, உடனடியாக கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்.
தமிழக அரசும் அதற்கான பேச்சுவார்த்தைகளுக்கு ஏற்பாடு செய்து வருகிறது. அந்த பகுதி மக்களை சந்தித்து, மத்திய, மாநில அரசுகள் பாதுகாப்பு குறித்து அறிஞர்களும், விஞ்ஞானிகளும் விளக்கி வருகின்றனர். தனி ஒரு கூட்டத்தால், இத்திட்டத்தை தடுக்க முடியாது. தமிழகத்தில் மின் பற்றாக்குறையை சீரமைக்க, கூடங்குளம் அணுமின் நிலையம் விரøவில் திறக்கப்படும்.
தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி நான்றாக உள்ளது. தற்போதைய, அ.தி.முக., ஆட்சியில் பஸ் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு மக்களை பாதித்துள்ளது. கேரள கடல் பகுதியில் தமிழக மீனவர்களை இத்தாலி நாட்டை சேர்ந்தவர்கள் சுட்டு கொல்லப்பட்டது குறித்து, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.