தேடல்

கூடங்குளம் :நாராயணசாமி விளக்கம்

புதுடில்லி : கூடங்குளம் அணுஉலை பற்றிய பிரதமரின் கருத்து தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி விளக்கம் அளித்துள்ளார். மேலும் அணுவிபத்து இழப்பீட்டிற்கு ரூ.1500 கோடி முன்வைப்பு தொகை உள்ளது எனவும், கூடங்குளத்தில் மின்உற்பத்தி தொடங்கும் போது தமிழகத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்குவது குறித்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர் உறுதி அளித்துள்ளார்.