கொட்டகையில் தீ19 ஆடுகள் கருகி பலி

திருவண்ணாமலை: ஆரணி அருகே மின் கசிவால் கொட்டகையில் ஏற்பட்ட தீ விபத்தில்,

19 ஆடுகள் கருகி பலியாகின.ஆரணி அடுத்த எம்.பி., தாங்கல் கிராமத்தை

சேர்ந்தவர் விவசாயி வேணுகோபால். இவர் 19 ஆடுகளை வளர்த்து வந்தார். வீட்டு

அருகே கொட்டகை அமைத்த ஆடுகளை அடைத்து வைத்து இருந்தார். நேற்று முன்தினம்

இரவு கொட்டகை மேலே சென்ற மின் கம்பி இருந்து கசிவு ஏற்பட்டு கொட்டகையில்

தீப்பிடித்து தீ மளமளவென்று கொட்டகை முழுவதும் எரிந்தது. இதில், 19

ஆடுகளும் கருகி பலியாகின.வி.ஏ.ஓ., பலராமன் போலீஸில் புகார் அளித்தார். ஆரணி

போலீஸார் விசாரிக்கின்றனர்.