தேடல்

குடிசை பகுதிகளில் மெகா கூட்டு துப்புரவு பணி: கமிஷனர் தகவல்

திருச்சி: திருச்சி மாநகராட்சி கமிஷனர் தண்டபாணி வெளியிட்டுள்ள அறிக்கை:திருச்சி மாநகராட்சியின் 65 வார்டுக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளையும் குப்பை தேங்காமல் பராமரிக்க ஒவ்வொரு வாரமும் குறிப்பிட்ட சில வார்டுகள் தேர்வு செய்யப்பட்டு மெகா கூட்டு துப்புரவு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன்படி, ஜூன் மாதத்தில் அனைத்து வார்டுகளிலும் முதல்கட்டமாக சிறப்பு கூட்டு துப்புரவு பணி மேற்கொண்டு முடிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் 2ம் கட்டமாக அந்தந்த வார்டுகளில் உள்ள குடிசை பகுதிகளுக்கு முக்கியத்துவம் அளித்து துப்புரவு பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின்படி, இரண்டாம் கட்டமாக இன்று 3ம் தேதி மற்றும் ஐந்தாம் தேதிகளில் ஸ்ரீரங்கம் கோட்டத்தில் 4, 13, 3, 12வது வார்டுகளிலும், அரியமங்கலம் கோட்டத்தில் 21, 23, 20, 22வது வார்டுகளிலும், பொன்மலை கோட்டத்தில் 34, 44, 36, 42வது வார்டுகளிலும், கோ-அபிஷேகபுரம் கோட்டத்தில் 49, 56, 45, 55வது வார்டுகளிலும் உள்ள குடிசை பகுதிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து 16 வார்டுகளில் மேற்குறிப்பிட்டுள்ள நாட்களில் பிற்பகல் இரண்டு மணி முதல் மாலை ஐந்து மணி வரை மெகா கூட்டு துப்புரவு பணி மேற்கொள்ளப்படும்.

இந்த மெகா கூட்டு துப்புரவு பணிகள் நடைபெறுவதை அந்தந்த கோட்டத்தலைவர்கள், சம்பந்தப்பட்ட பகுதி கவுன்சிலர்கள், பொதுமக்கள் பயன்படுத்திக் கொண்டு மாநகரை குப்பைகள் தேங்காமல் சுகாதாரமாக பராமரிக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.