அம்பந்தோட்டை:
தெற்காசிய பீச் கூடைப்பந்து போட்டியின் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் இந்திய அணி தங்கம் வென்று சாதித்தது.இலங்கையில் உள்ள அம்பாந்தோட்டை நகரில், தெற்காசிய பீச் விளையாட்டு போட்டி நடக்கிறது. நேற்று நடந்த ஆண்களுக்கான பீச் கூடைப்பந்து போட்டியின் பைனலில், இந்தியா-இலங்கை அணிகள் மோதின. இதில் அபாரமாக ஆடிய இந்திய அணி 21-16 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது. முன்னதாக லீக் சுற்றில் இந்திய அணி, மாலத்தீவு, பூடான், இலங்கை அணிகளை வீழ்த்தியது.
பெண்களுக்கான பீச் கூடைப்பந்து பைனலில் இந்தியா-மாலத்தீவு அணிகள் மோதின. இதில் இந்திய அணி 17-7 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கம் வென்றது. முன்னதாக லீக் சுற்றில் இந்திய அணி, நேபாளம், மாலத்தீவு, இலங்கை அணிகளை தோற்கடித்தது.
