கூடைப்பந்து: லிதுவேனியா 5வது இடம்

கவுனாஸ்: யூரோ கோப்பை கூடைப்பந்து தொடரில், லிதுவேனியா அணி ஐந்தாவது இடம் பிடித்தது.
யூரோ கோப்பை கூடைப்பந்து தொடர் லிதுவேனியாவில் நடக்கிறது. இதன் 5-6வது இடத்துக்கான போட்டியில் லிதுவேனியா, கிரீஸ் அணிகள் மோதின. இதில் அபாரமாக ஆடிய லிதுவேனியா அணி 73-69 என்ற கணக்கில் வெற்றி பெற்று, ஐந்தாவது இடம் பிடித்தது. கீரிஸ் அணிக்கு 6வது இடம் கிடைத்தது.
பின், 7-8வது இடத்துக்கான போட்டியில் சுலோவேனியா-செர்பியா அணிகள் மோதின. இதில் சுலோவேனியா அணி 72-68 என்ற கணக்கில் வெற்றி பெற்று, 7வது இடம் பிடித்தது. செர்பிய அணிக்கு 8வது இடம் கிடைத்தது.