கவுனாஸ்:யூரோ கோப்பை கூடைப்பந்து தொடரில், ஸ்பெயின் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
யூரோ கோப்பை கூடைப்பந்து தொடர் லிதுவேனியாவில் நடந்தது. இதில் நடப்பு சாம்பியன் ஸ்பெயின், பிரான்ஸ் அணிகள் மோதின. கடுமையான போட்டிக்குப் பின் ஸ்பெயின் அணி 98-85 என்ற கணக்கில் வெற்றி பெற்று, தொடர்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இதையடுத்து வரும் 2012, லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு ஸ்பெயின், பிரான்ஸ் அணிகள் தகுதி பெற்றன.
