தேடல்

கிணத்துக்கடவில் மா.கம்யூ., கூட்டம்

கிணத்துக்கடவு : கிணத்துக்கடவில், மா. கம்யூ., சார்பில் கிளை கூட்டம் நடந்தது. நகர செயலாளர் மணிகண்டன் தலைமை வகித்தார். தாலுகா கமிட்டி உறுப்பினர்

மருதாசலம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், கிணத்துக்கடவு அரசு

மேல்நிலைப்பள்ளியில் இரண்டாயிரம் மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.

அவர்களுக்கு குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் அவதிப்படுகின்றனர்.

இப்பள்ளிக்கு குடிதண்ணீர் கிடைக்க பேரூராட்சி நிர்வாத்திற்கு மனு

கொடுப்பது, தொலைபேசி சேவை மையம் கிணத்துக்கடவில் அமைக்க கோருவது, நீண்ட

நாள் கோரிக்கையாக இருந்து வரும், கிணத்துக்கடவு அரசு ஆரம்ப சுகாதார

நிலைத்தை விரிவு படுத்தி, படுக்கை வசதியுடன் கூடிய சுகாதார மையமாக தரம்

உயர்த்த வேண்டும்.

கிணத்துக்கடவில், காஸ் ஏஜென்சிஸ் இரண்டாக பிரிக்க வேண்டும் என்று கோவை

எம்.பி., நடராஜன், கோவை மாவட்ட கலெக்டர் ஆகியோரிடம் கொடுத்த மனுவின் மேல்

பரிசீலனை செய்து புதிய காஸ்ஏஜென்சிஸ் துவக்கியதற்கு நன்றி தெரிவிப்பது

உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.