புதுடில்லி:"கென்ட் ஆர்ஓ சிஸ்டம்ஸ்' நிறுவனம், கடின நீரை மென் நீர் ஆக்கும், நவீன தொழில்நுட்பத்திலான தண்ணீர் சுத்திகரிப்பு சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது.இது குறித்து இந்நிறுவனத்தின் தலைவர் மகேஷ் குப்தா கூறியதாவது:கடின நீரால், பொதுமக்கள் தற்போது மிகவும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
குறிப்பாக, இந்த கடின நீரில் கலந்துள்ள, அளவுக்கு அதிகமான கால்சியம் மற்றும் மெக்னீசியத்தால், குளிப்பது, சலவை செய்வது மற்றும் பாத்திரங்கள் தேய்ப்பது மிகவும் சவாலாக உள்ளது. இந்நீரால், குழாய்கள், தொட்டிகள், வெந்நீர் குடுவைகள் உள்ளிட்டவைகளில், மிக விரைவில் அரிப்பு ஏற்பட்டு, பழுதடைந்து விடுகின்றன. மேற்கண்ட பிரச்னைகளுக்கு தீர்வாக, கடின நீரை மென்னீராக மாற்றும் புதிய சாதனத்தை நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இப்புதிய சாதனத்தை பொருத்துவதும், பயன்படுத்துவதும் எளிது. இச்சாதனத்தின் மூலம், ரசாயன கலப்பற்ற, மாசில்லா தூய்மையான நீரை பெறலாம். இந்த சாதனத்தின் விலை, 6,000 ரூபாயாகும்.இவ்வாறு குப்தா கூறினார்.

