சென்னை:சென்னை நகரில், வரும் மார்ச் மாதத்தில் இருந்து, குப்பையைப் பார்க்க முடியாது; அந்த அளவிற்கு தீவிர திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது, என, முதல்வர் பிறந்தநாள் விழாவில், மேயர் சைதை துரைசாமி கூறினார்.
முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, வேளச்சேரி, காந்தி சாலையில் நடந்த விழாவிற்கு, எம்.எல்.ஏ., அசோக் தலைமை தாங்கினார்.
மாநகராட்சி மேயர் துரைசாமி பேசுகையில், சென்னை நகரில், வரும் மார்ச் மாதம் முதல், குப்பையை, குப்பைத் தொட்டிகளில்கூட பார்க்க முடியாது. அந்த அளவிற்கு சிறப்பாகத் திட்டமிட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாநகராட்சி மொத்த ஊழியர்களின் ஒரு நாள் சம்பளம், 97 லட்சம் ரூபாய். இதை, வீட்டுவரி, தொழில் வரி போன்றவை மூலம் வழங்கி வருகிறோம், என்றார்.
விழாவில், இலவச வேட்டி, சேலைகள், தையல் இயந்திரங்கள், மூன்று சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டன.
