பிப்ரவரி, 1ம் தேதி, தமிழ் திரைப்பட ரசிகர்களுக்கு, ரொம்பவே ஸ்பெஷலான நாள். நீண்ட இடைவெளிக்கு பின், பிரபல இயக்குனர் மணிரத்னம், தமிழில் நேரடியாக இயக்கும், கடல் படம், அன்று தான், வெளியாகப் போகிறது. கவுதம் கார்த்திக், துளசி நாயர் போன்ற புதுமுகங்களுடன், அரவிந்த்சாமி, அர்ஜுன் போன்ற, அனுபவ நட்சத்திரங்களும் நடித்துள்ள படம் என்பதாலும், ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள படம் என்பதாலும், ரசிகர்களிடையே, இந்த படத்துக்கு, எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கடலோர கிராமத்தில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து, தயாராகியுள்ளது.
இதே நாளில், டேவிட் என்ற படமும் வெளியாகிறது. விக்ரம், ஜீவா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படமும், கடலோர பகுதிகளை மையமாக வைத்துத் தான், தயாராகியுள்ளது. தமிழில் மட்டுமல்லாது, இந்தியிலும் இந்த படம் வெளியாகிறது. டேவிட் படத்தை இயக்கும் பிஜேய் நம்பியார், இயக்குனர் மணிரத்னத்திடம், உதவி இயக்குனராக பணியாற்றியவர். இந்த படத்தின் தயாரிப்பாளர், மணிரத்னத்தின் உறவினரான, சாரதா திரிலோக். இப்படி, பல ஒற்றுமைகளுடன் உள்ள, இந்த இரண்டு படங்களும், ஒரே தேதியில் வெளியாவதால், இந்த படங்களின் வசூல் பாதிக்கப்படாதா என, கோலிவுட்டில் பேச்சு எழுந்துள்ளது.
சினிமா என்பதும், சில நேரங்களில் சூதாட்டம் போன்றது தான். நல்ல கதை, இனிமையான பாடல், சிறப்பான நடிப்பு, நவீன தொழில் நுட்பங்கள் என, பல விஷயங்கள், திரைப்படங்களின் வெற்றிக்கு, அடையாளமாக திகழ்ந்தாலும், நேரமும் நன்றாக இருக்க வேண்டும் என்கின்றன, கோலிவுட் வட்டாரங்கள். பிப்ரவரி, 1ம் தேதி, குரு - சிஷ்யனுக்கு இடையே நடக்கும் போட்டியில், வெற்றி பெறப்போவது யார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
குரு-சிஷ்யன் போட்டி! வெற்றி யாருக்கு?
தினமலர் – பு, 23 ஜன., 2013சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
புன்னகைபயணம்
10 புகைப்படங்கள் - 17 மணிநேரம் முன்உலகம்-22-05-2013
23 புகைப்படங்கள் - 18 மணிநேரம் முன்அரசியல்-22-05-2013
16 புகைப்படங்கள் - 18 மணிநேரம் முன்பொது-22-05-2013
15 புகைப்படங்கள் - 18 மணிநேரம் முன்சம்பவம்-22-05-2013
12 புகைப்படங்கள் - 18 மணிநேரம் முன்
தொடர்புடைய செய்திகள்
- வசந்தபாலன் - ரகுமான் இணையும் …
- தமிழ் சினிமாவில் மறக்க முடியாத …
- கர்நாடக சட்டசபை தேர்தல்: மீண்டும் …
- கர்நாடக சட்டசபை தேர்தல் முன்னிலை …
- சுனைனாவுக்கு போட்டி போடும் ஸ்ரீகாந்த்- …
- கர்நாடகாவில் ஆட்சியைக் கைப்பற்றியது …
- இயக்குனர் சங்கத்தின் புதிய கட்டடம் …
- டேம் 999 படத்துக்கு 3 சர்வதேச …
- ஷாமிற்கு தெலுங்கு சினிமாதான் அதிர்ஷ் …
- ஜூலை 30ம் தேதி வரை கவுன்சிலிங்: …
- தனுஷ் போன்ற கணவர் வேண்டும்! சோனம் …
- ஐகோர்ட்டில் வழக்கு தொடர்வதற்கு புதிய …
- வழக்கு தொடர்வதற்கு ஐகோர்ட்டில் புதிய …
- யாரையும் போட்டியாக நினைத்தால் முன்னேற …
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
ஐ.மு.கூட்டணி அரசின் சாதனை அறிக்கை: வெளியிட்டார் மன்மோகன்
தினமலர் - 1 மணிநேரம் 22 நிமிடங்கள் முன்துப்பாக்கியை காட்டி மிரட்டல் நாடகம் நடத்திய சினிமா பைனான்சியர் :
தினமலர் - 1 மணிநேரம் 23 நிமிடங்கள் முன்சபாஷ் ராஜஸ்தான் அணி : ஹாட்ஜ் அதிரடியில் திரில் வெற்றி : வெளியேறியது ஐதராபாத் அணி
தினமலர் - 1 மணிநேரம் 46 நிமிடங்கள் முன்ஆட்சி என்றைக்கும் நிரந்தரமல்ல: கருணாநிதி
தினமலர் - 1 மணிநேரம் 46 நிமிடங்கள் முன்தேர்தல் தேதி அறிவித்த பின் கூட்டணி பற்றி முடிவு: ஸ்டாலின்
தினமலர் - 1 மணிநேரம் 46 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான புகைப்படங்கள்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4

