தேடல்

குரூப்-1 முதன்மை தேர்வு: 2,800 பேர் பங்கேற்றனர்

சென்னை: ஆர்.டி.ஓ., - டி.எஸ்.பி., உள்ளிட்ட பணியிடங்களுக்கான குரூப்-1 முதன்மைத் தேர்வு, சென்னையில் இன்று நடந்தது. இதில், 2,800 பேர் பங்கேற்றனர். முதல்நிலைத் தேர்வுக்குப் பின், இன்று முதன்மைத் தேர்வு நடந்தது. சென்னையில் மட்டும் 10 மையங்களில் நடந்த தேர்வில், 2,800 பேர் பங்கேற்றனர். இன்று, பொது அறிவு முதல் தாள் தேர்வு நடந்தது. இதற்கு, 300 மதிப்பெண்கள் .பொது அறிவு, இரண்டாம் தாள் தேர்வு, நாளை அதே மையங்களில் நடக்கிறது. இதுவும், 300 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகிறது. இத்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில், நேர்முகத் தேர்வு நடத்தப்படும். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில், 131 பணியிடங்களுக்கான தேர்வுப் பட்டியல் வெளியிடப்படும்.