சென்னை:கடந்த சில நாட்களாக, கைகொடுத்து வந்த காற்றாலைகள், கடந்த இரு தினங்களாக மின் உற்பத்தியை இழந்துவிட்டன. மொத்த காற்றாலை உற்பத்தியில், 10 சதவிகித்துக்கும் குறைவாகவே, மின் உற்பத்தி கிடைத்துள்ளது.
தமிழகத்தில், 4,000 மெகாவாட் மின் பற்றாக்குறை உள்ளது. இதனால்,பல மாவட்டங்களில், 14மணி நேரத்திற்கு மேலாக, மின் தடை உள்ளது. பருவ மழையின்மை உள்ளிட்ட பல காரணங்களால், கடந்த மாதம் இறுதி வரை, 7,000 முதல் 8,000மெகாவாட் மட்டுமே, மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. கடந்த சில நாட்களாக, படிப்படியாக, 9,000 ஆயிரம் மெகாவாட் அளவிற்கு, மின் உற்பத்தி அதிகரித்தது. தென் மாவட்டங்களில், ஓரளவு காற்று வீசியதால், காற்றாலை மின் உற்பத்தியும், 1,176 மெகாவாட் அளவிற்கு உயர்ந்தது.
காற்று குறைந்ததால், காற்றாலைகளால் கிடைத்து வந்த மின்சாரம், நேற்று, 400 மெகாவாட்டாக குறைந்தது. இதனால், நேற்று காலை நிலவரப்படி, மொத்த மின் உற்பத்தி, 8,808 மெகாவாட்டாக, குறைந்தது. தற்போது, குளிர் காலம் என்பதால், இரவு நேரங்களில், மின் தேவையின் அளவும் குறையும். இதனால், மின் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள குறைவு, பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தாது என, மின்வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காற்றாலை மின் உற்பத்தி 10 சதவிகிதத்துக்கு கீழ் சென்றது
தினமலர் – பு, 26 டிச., 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம் 19-6-2013
23 புகைப்படங்கள் - 20 மணிநேரம் முன்தமிழகம் 19-6-2013
45 புகைப்படங்கள் - 21 மணிநேரம் முன்பொது 19-6-2013
13 புகைப்படங்கள் - 21 மணிநேரம் முன்சம்பவம் 19-6-2013
16 புகைப்படங்கள் - 21 மணிநேரம் முன்அரசியல் 19-6-2013
20 புகைப்படங்கள் - 21 மணிநேரம் முன்
தொடர்புடைய செய்திகள்
- கூடுதலாக 88,537 மெகாவாட் மின்சாரம் …
- பருவ நிலை மாற்றத்தால் குறைந்தது மின் …
- குளுகுளு சீஸன்: தடையில்லா மின்சாரம் …
- மொத்த மின் பற்றாக்குறை 6.7 சதவீதமாக …
- தயாரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சியில் …
- உருக்கு உற்பத்தி வளர்ச்சி: இந்தியா …
- தமிழகத்தில் 26.5 சதவீத மின் …
- ஈரோடு மண்டலத்தில்..."லோடு' இல்லாமல் …
- பருத்தி உற்பத்தி 3.52 கோடி பொதிகளாக …
- நாட்டின் சர்க்கரை உற்பத்தி10 சதவீதம் …
- மழையால் வெண்பட்டு கூடு உற்பத்திபாதிப்பு: …
- வெல்லம் உற்பத்தி பாதிப்பு: விலை கடுமையாக …
- மக்காச்சோளம் விலை மேலும் உயரும்:தமிழ்நாடு …
- 2022-ம் ஆண்டில் பருத்தி உற்பத்தியில் …
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
இஸ்ரோ உள்ளிட்ட முக்கிய இடங்களை தாக்க சதி: பாதுகாப்புக்கள் தீவிரம்
தினமலர் - 1 மணிநேரம் 49 நிமிடங்கள் முன்37 நகரங்களில் எம்.டி.எஸ்., சேவை
தினமலர் - 4 மணிநேரம் முன்திரையுலக வாழ்க்கையில் கிசுகிசுக்கள் சாதாரண விஷயம்: பிபிஷாபாசு
தினமலர் - 7 மணிநேரம் முன்ஹாலிவுட் படம்இயக்கும் பி.வாசு
தினமலர் - 7 மணிநேரம் முன்பாலா - எஸ்.ரா., மீண்டும் கூட்டணி
தினமலர் - 7 மணிநேரம் முன்

