கால்பந்து: நாபோலி அணி வெற்றி

புளோரன்ஸ்: இத்தாலியில் நடக்கும் கால்பந்து தொடரில் நாபோலி அணி 24 வது லீக் போட்டியில், பியோரென்டினா அணியை சந்தித்தது.
துவக்கத்தில் இருந்தே நாபோலி அணி அசத்தியது. போட்டியின் 3வது நிமிடத்தில் முதல் கோல் அடித்த எடின்சன் கவானி, 55 வது நிமிடத்தில் இரண்டாவது கோல் அடித்து அசத்தினார். கடைசி நிமிடத்தில் (90வது) லாவேஜி, தன்பங்கிற்கு ஒரு கோல் அடித்தார். 3-0 என்ற கோல் கணக்கில் நாபோலி அணி வெற்றி பெற்றது. மொத்தம் 37 புள்ளிகள் பெற்றுள்ள இந்த அணி, புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது.