தேடல்

கோவையில் மர்மகாய்ச்சலுக்கு பெண் பலி

கோவை : கோவையில் மர்மகாய்ச்சலுக்கு பெண் பலியாகியுள்ள நிலையில், மேலும் 4 பேருக்கு‌ நோய் தொற்று ஏற்பட்டிருப்பதால் அங்கு மீண்டும் பன்றிக்காய்ச்சல் பரவியுள்ளதாக வந்த பீதியையடுத்து அங்கு பெரும்பரபரப்பு நிலவி வருகிறது. நீலகிரி மாவட்டம் ஊட்டியை அடுத்த போர்த்தியாடா பகுதியை சேர்‌ந்தவர் காயத்ரி (24). மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவர், கோவையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின், சில நாட்களுக்கு முன் அவர் கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்நிலையில், அவரது குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு நோய் தொற்று இருந்ததையடுத்து, அவர்களிடமிருந்து ரத்த மாதிரிகள் பெறப்பட்டு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. சோதனையின் இறுதியில் தான் அது பன்றிக்காய்ச்சலா அல்லது இல்லையா என்பது ‌தெரியவரும், கடந்தாண்டில் மட்டும், கோவையில் பன்றிக்காய்ச்சல் நோய் தாக்கி 2 பேர் பலியாயினர் என்பது குறிப்பிடத்தக்கது. போர்த்தியாடா கிராம மக்களுக்கு, டாக்டர்கள் மருத்துவ பரிச‌ோதனை மேற்கொண்டு வருகின்றனர்.