வன்முறை காட்சிகள், பாலியல் உணர்வை தூண்டும் காட்சிகள் உள்ளிட்ட காட்சிகளின் அடிப்படையில் படங்களுக்கு ஏ சான்று கொடுத்து வந்த தணிக்கை துறை இனி, ஒரு படத்தில் குத்துப்பாட்டு என்ற பெயரில் கவர்ச்சி பாட்டு இருந்தாலே அந்த படத்துக்கும் ஏ சான்று கொடுக்க முடிவு செய்துள்ளது. இந்திய சினிமாக்களில் அதுவும் கமர்ஷியல் படங்களில் நல்ல கதை இருக்கிறதோ இல்லையோ கட்டாயம் ஒரு குத்துப்பாட்டு இருக்க வேண்டும் என்ற சூழல் சினிமா உலகில் காலம் காலமாக இருந்து வருகிறது. சமீபகாலமாக இதுபோன்ற பாட்டுகள் அதிகம் இடம் பெறத் தொடங்கியுள்ளன. குறிப்பாக இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் இது போன்ற பாடல்கள் அதிகம் இடம்பெறுகின்றன. இதற்கு என்று கவர்ச்சி நடிகைகள் சிலர் இருந்தாலும், ஒரு பாட்டுக்கு அதிகம் பணம் தருகிறோம் என்று தயாரிப்பாளர்கள் பணத்தை வாரி கொடுப்பதால் முன்னணி நடிகைகள் பலரே இதுபோன்ற ஆட்டங்களை ஆட தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் சமீபத்தில் இந்தியாவையே அதிர வைத்த டில்லி மாணவி பலாத்காரம் சம்பவம், பெண்களுக்கு எதிரான கொடுமைகளை தடுக்க கடுமையான சட்டங்கள் இயற்ற வழிவகை செய்ததுடன், சினிமா தணிக்கை துறையையும் சிந்திக்க வைத்துள்ளது. பெண்களுக்கு எதிரான இதுபோன்ற சம்பவங்களுக்கு சினிமாவும் ஒரு காரணமாக அமைவதால் தணிக்கை துறையும் சில அதிரடி திட்டங்களை கொண்டு வர முடிவு செய்துள்ளது. அதன்படி இனி படங்களில் குத்தாட்டம் என்ற பெயரில் கவர்ச்சி நடனங்கள் இடம்பெற்றால் அந்தபடத்திற்கு ஏ சான்று வழங்குவது என்று முடிவு செய்து இருக்கிறது.
தணிக்கை வாரியத்தின் இந்த முடிவால் திரைப்பட தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். இதற்கு முக்கிய காரணம் ஒரு படத்திற்கு ஏ சான்று வழங்கப்பட்டால் அதனை டி.வி.க்களில் ஒளிப்பரப்புவது உள்ளிட்ட பல நடைமுறை சிக்கல் இருக்கின்றனர். எனவே இதனை தணிக்கை துறை பரிசீலிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
குத்துப்பாட்டுக்கும் இனி ஏ சான்று தான்! தணிக்கை துறை அதிரடி
தினமலர் – பு, 6 பிப்., 2013சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம் 25-5-2013
10 புகைப்படங்கள் - 22 மணிநேரம் முன்தமிழகம் 25-5-2013
32 புகைப்படங்கள் - 22 மணிநேரம் முன்பொது 25-5-2013
24 புகைப்படங்கள் - 22 மணிநேரம் முன்சம்பவம் 25-5-2013
14 புகைப்படங்கள் - 22 மணிநேரம் முன்அரசியல் 25-5-2013
15 புகைப்படங்கள் - 22 மணிநேரம் முன்
தொடர்புடைய செய்திகள்
- ஆபாசமாக நடிக்கமாட்டேன்! தமன்னா …
- பொது தேர்தலுக்கு தயாராகிறதா காங். …
- தமிழ் சினிமாவில் மறக்க முடியாத …
- ரசிகர்களுக்கு பிடித்துவிட்டால் நடிகைகளைகொண்டாடுவார்கள்:ஸ்ரியா …
- தொழில் துறை உற்பத்தி ஒரு சதவீதம் …
- தனுஷ் போன்ற கணவர் வேண்டும்! சோனம் …
- நான்தான்டா - தமிழ்தான்டா! ராம்கோபால் …
- கல்லூரிகளில் இனி ஆங்கிலம் தான் …
- விஜய்-முருகதாஸ் படத்திற்கு கொலவெறி …
- முதலில் தமிழ் அடுத்து இந்தி
- ஆசை ஆசை, அஜீத், விஜய் ஜோடியாக …
- மச்சான் என்ற வார்த்தையில் அன்பு இருந்தது! …
- படாதிபதிகளுக்கு செலவு வைக்கிறாராம் …
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
கால்பந்து: பேயர்ன் முனிக் அணி சாம்பியன்
தினமலர் - 1 மணிநேரம் 27 நிமிடங்கள் முன்ஹாங்காங் தங்கம் விலை நிலவரம்
தினமலர் - 1 மணிநேரம் 46 நிமிடங்கள் முன்சீனாவுடனான எல்லை பிரச்சினை: ஒத்துழைப்பும், போட்டியும் உள்ளது என்கிறார் அந்தோனி
தினமலர் - 1 மணிநேரம் 53 நிமிடங்கள் முன்அம்மா உணவகங்களில் பொங்கல் விற்பனை: மக்கள் விருப்பம்
தினமலர் - 3 மணிநேரம் முன்குருபெயர்ச்சி - கட்சி தலைவர்களுக்கு சாதகமா? பாதகமா?
தினமலர் - 3 மணிநேரம் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4

