கத்தார் ஓபன் டென்னிஸ்: சானியா ஜோடி தோல்வி

கத்தார்: கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் இரட்டையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா, ரஷ்யாவின் வெஸ்னினா ஜோடி அதிர்ச்சித் தோல்வியடைந்தது.
தோகாவில் கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா, ரஷ்யாவின் வெஸ்னினா ஜோடி, இஸ்ரேலின் ஷகர் பியர், ரஷ்யாவின் துஷிவினா ஜோடியை சந்தித்தது.
இதன் முதல் செட்டில் 4-6 என்று இழந்த சானியா ஜோடி, இரண்டாவது செட்டில் எழுச்சி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், இந்த செட்டிலும் 4-6 என, சானியா ஜோடி இழந்தது. முடிவில், 4-6, 4-6 என்ற நேர்செட்கணக்கில் சானியா ஜோடி அதிர்ச்சித் தோல்வியடைந்தது.