தங்கம் கடத்திய காரைக்கால் நபர்"காபிபோசா' சட்டத்தில் கைது

சிதம்பரம்:வெளிநாட்டிலிருந்து தங்கம் கடத்திய காரைக்காலைச் சேர்ந்தவர்,

காபிபோசா சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.புதுச்சேரி மாநிலம், காரைக்கால்

முருகராம் நகரைச் சேர்ந்தவர் அப்துல் லத்தீப் மகன் முகமது காசீம், 32.

இவர், கடந்தாண்டு நவ., 14ம் தேதி மஸ்கட் நாட்டிலிருந்து சென்னை வந்த போது,

650 கிராம் தங்கம் கடத்தி வந்ததாக மத்திய சுங்கத்துறை போலீசாரால் கைது

செய்யப்பட்டு ஜாமினில் இருந்தார்.இந்நிலையில் முகமது காசீமை, காபிபோசா

சட்டத்தில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் போலீசார் கைது செய்ய வேண்டும் என,

நிதித்துறைச் செயலர் குமார் ஜெயந்த் உத்தரவிட்டார்.அதன் பேரில் சிதம்பரம்

இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையிலான தனிப்படை போலீசார், காரைக்கால் சென்று

முகமது காசீமை கைது செய்து மாஜிஸ்திரேட் ஈஸ்வரமூர்த்தி முன் கோர்ட்டில்

ஆஜர்படுத்தி, கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.