தேடல்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 உயர்வு

சென்னை : வார இறுதி நாளான இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலையில் ஏற்றம் காணப்படுகிறது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.64ம், பார்வெள்ளி விலை ரூ.980ம் அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம்(22காரட்) ஆபரண தங்கத்தின் விலை ரூ.2,811 ஆகவும், 10 கிராம்(24 காரட்) தங்கத்தின் விலை ரூ.30,065 ஆகவும் உள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ.22,488க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.57.80 ஆகவும், பார்வெள்ளி விலை ரூ.53,665 ஆகவும் உள்ளது.