உங்கள் வாகனத்தின் விவரத்தை மொபைல் போனில் அறியலாம்

மதுரை: வாகனங்களின் எண், பெயர் போன்ற விவரங்களை மொபைல் போனில் அறிந்து கொள்ளும் வசதி, நேற்று முதல் அறிமுகப்படுத்தப்பட்டது. வாகனங்களின் விபத்து, திருட்டு போன்ற சம்பவங்களால், அதன் விவரங்களை தெரிந்து கொள்வதற்கு, வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்குச் சென்று, காலவிரயம் செய்து தான் முழுமையான தகவல்களை தெரிந்து கொள்ளும் நடைமுறை இருந்து வந்தது. இந்தியாவின் எந்த பகுதியில் உள்ள வாகனங்களாக இருந்தாலும், அவற்றின் எண்களை, எஸ்.எம்.எஸ்., மூலம் அனுப்பி, அதன் விவரத்தை மறு நிமிடமே அறிந்து கொள்ளும் நடைமுறை வந்துள்ளதால், வாகன ஓட்டுனர்கள் மற்றும் போக்குவரத்து அதிகாரிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மொபைல் போனில் கிரியேட் மெசேஜ் மெனுவில், வாகன் என டைப் செய்து ஒரு ஸ்பேஸ் விட்டு, வண்டியின் எண்ணை இடைவெளி விடாமல் டைப் செய்ய வேண்டும். உதாரணமாக திச்டச்ண tண58தூ0001. இந்த மெசேஜை, 09212357123 என்ற எண்ணிற்கு அனுப்ப வேண்டும். உடனடியாக, அனுப்பப்பட்ட வண்டியின் உரிமையாளர், என்ன வகையான வண்டி, ரோடு டாக்ஸ் விவரங்கள் நமக்கு அனுப்பப்பட்டுவிடும்.
மதுரை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலர் கல்யாண்குமார் கூறுகையில், ""இந்த வசதியினால், எல்லாரும் பயன்பெற முடியும். வாகனங்கள் வைத்திருப்பவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். இந்த வசதியினால், ஏற்கனவே இருந்த நடைமுறை சிக்கல்களுக்கு தீர்வு கிடைத்துள்ளது'' என்றார்.