புனே: மகாராஷ்டிராவில் சரத்பவார் கட்சி பிரமுகர் ஒருவர் ரூ. 1.25 கோடி மதிப்பிலான தங்கத்தால் சட்டை அணிந்து வந்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். வரப்போகும் லோக்சபா தேர்தலில் டிக்கெட் கேட்டு போட்டியிட விரும்புவதாகவும் தெரிவித்தார்.மாகராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தைச்சேர்ந்தவர் தட்டா பஹே (32).
இவர் சரத்பவாரின் தேசியவாத காங். கட்சியைச்சேர்ந்த உள்ளூர் பிரமுகர். இவர் நேற்று புனே கட்சி அலுவலகம் வந்தார். அப்போது பத்து விரல்களிலும் தங்க மோதிரம், மாலையை கழுத்தில் அணிந்தாற் போன்று தங்கத்தால் செயின்கள், தங்கத்தால் ஆன பிரெஸ்லெட் ஆகியவற்றுடன் முற்றிலும் தங்கத்தினால் செய்யப்பட்ட மேல்சட்டையுடன் வந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
இவர் அணிந்து வந்த சட்டையின் எடை 3.5 கிலோ. அதன் மதிப்பு ரூ.1.25 கோடி எனவும், கழுத்தில் அணிந்துள்ள தங்க நகைகள், உள்ளிட்டவை மொத்தமாக ரூ.7 கோடி என கூறப்படுகிறது. இவ்வாறு அவர் வந்ததை கேள்விப்பட்ட மராத்தி மற்றும் லோக்கல் டி.வி. ஊடகத்தினர் அவரை மொய்த்துவிட்டனர். அவரை பல கோணங்களில் வீடியோ எடுத்து தள்ளினர். இது குறித்து அவர் கூறுகையில், நாடு முழுவதும் உள்ள மக்களின் கவனத்தை ஈர்த்து பிரபலமாகவே இப்படியொரு வித்தியாசமான காஸ்டியூமில் வந்தேன். மேலும் வரப்போகும் 2014-ம் லோக்சபா தேர்தலில் சீட் வாங்கி போட்டியிட வேண்டும் என்பதே எனது ஆசை என்றார் கூலாக. இது குறித்து சில டி.வி.சானல்கள், மாநிலத்தில் கடும் வறட்சி, வறுமை, பட்டினி,விவசாயிகள் தற்கொலை அதிகரித்து வரும் நிலையில் இது போன்ற செயல்பாடுகள் மக்களை வெறுப்படைய செய்வதாக செய்தி வெளியிட்டு வருகின்றன.
தங்க சட்டை அணிந்து பளபளக்க வைத்த பவார் கட்சி பிரமுகர்
தினமலர் – பு, 30 ஜன., 2013சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
புன்னகைபயணம்
10 புகைப்படங்கள் - 7 மணிநேரம் முன்உலகம்-22-05-2013
23 புகைப்படங்கள் - 7 மணிநேரம் முன்அரசியல்-22-05-2013
16 புகைப்படங்கள் - 7 மணிநேரம் முன்பொது-22-05-2013
15 புகைப்படங்கள் - 7 மணிநேரம் முன்சம்பவம்-22-05-2013
12 புகைப்படங்கள் - 8 மணிநேரம் முன்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
வருகிறது சுசூகியின் 250 சிசி பைக்
தினமலர் - 1 மணிநேரம் 0 நிமிடங்கள் முன்சில்க் ஸ்மிதாவே ரோல் மாடலாக எடுத்துக்கொண்டு சாதிக்கப்போகிறேன்! - சனாகான்
தினமலர் - 1 மணிநேரம் 6 நிமிடங்கள் முன்மன்மோகன் சிங் பிரதமர்; தலைவர் அல்ல: பா.ஜ., குற்றச்சாட்டு
தினமலர் - 1 மணிநேரம் 15 நிமிடங்கள் முன்விஜய் பிறந்த நாளில் தலைவா ஆடியோ ரிலீஸ்?
தினமலர் - 1 மணிநேரம் 15 நிமிடங்கள் முன்வெளிநாட்டு படக்குழுவுக்கு சிரஞ்சீவி அழைப்பு!
தினமலர் - 2 மணிநேரம் 6 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4

