புதுடில்லி: ஒலிம்பிக் ஹாக்கி தகுதிப் போட்டியில் இந்திய ஆண்கள் அணி, பிரான்சை 6-2 என்ற கோல் கணக்கில் வென்றது.
லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்கான ஹாக்கி தகுதிச் சுற்று ஆட்டங்கள் டில்லியில் நடக்கின்றன. நேற்று நடந்த ஆண்கள் பிரிவு போட்டியில் உலக ரேங்கிங் பட்டியலில் 10வது இடத்தில் இருக்கும் இந்திய அணி, பிரான்சை(18வது இடம்) எதிர்கொண்டது.
துவக்கத்தில் இருந்தே இந்திய வீரர்கள் தாக்குதல் பாணியிலான ஆட்டத்தை கையாண்டனர். தொடர்ந்து 3 கோல் அடித்த சந்தீப் சிங்(9, 30, 37வது நிமிடம்) ஹாட்ரிக் சாதனை படைத்தார். சிவேந்திர சிங்(4), சுனில்(39), துஷார் கண்டேகர்(62) தலா ஒரு கோல் அடித்தனர். போராடிய பிரான்ஸ் தரப்பில் லூகாஸ் செவஸ்திரி(35), பாபியன் மாக்னர்(57) தலா ஒரு கோல் அடித்தனர். இறுதியில் இந்திய அணி 6-2 என்ற கோல் கணக்கில் வென்றது. இதன் மூலம் தொடர்ந்து மூன்றாவது வெற்றியை பெற்றது. இப்போட்டியில் அசத்திய சந்தீப், அதிக கோல்(7) அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறினார்.
மூன்று போட்டிகளில் வென்ற இந்திய அணி, 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
சந்தீப் சிங் ஹாட்ரிக்: இந்தியா வெற்றி
தினமலர் – செ, 21 பிப்., 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
சந்தமாமா
6 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012ஓட ஓட காதல் குறையல்ல
10 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012சமர்
6 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012இதயம் திரையரங்கம்
7 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012சினேகா - பிரசன்னா திருமணம்
15 புகைப்படங்கள் - வெ, 11 மே, 2012
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
இயற்கை உரங்களுக்கு முக்கியத்துவம்...ரசாயன உர மானியத்தை குறைக்க திட்டம்
தினமலர் - 47 நிமிடங்கள் முன்பால் பவுடர் ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்க பரிசீலனை
தினமலர் - 48 நிமிடங்கள் முன்ஆலங்குளம், அரியலூர் சிமென்ட் ஆலைகளைமேம்படுத்த தமிழக அரசு ரூ.515 கோடி ஒதுக்கீடு
தினமலர் - 49 நிமிடங்கள் முன்சென்னை அருகே தொழில் நகரியம்
தினமலர் - 49 நிமிடங்கள் முன்வெள்ளை நிற கார்களுக்கு மவுசு-
தினமலர் - 50 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
