தேடல்

சரிவுடன் தொடங்கியது வர்த்தகம்

மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இரண்டாம் நாளான இன்று சரிவுடன் தொடங்கியது. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய நேரத்தில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 114.54 புள்ளிகள் குறைந்து 16553.47 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 27.65 புள்ளிகள் குறைந்து 5040.70 புள்ளிகளோடு காணப் பட்டது.நாட்டின் பங்கு வியாபாரம் வாரத்தின் தொடக்க தினமான நேற்று, அதிக ஏற்ற, இறக்கத்துடன் இருந்தது. இந்நிலையில், சர்வதேச தரக்குறியீட்டு நிறுவனமான ஸ்டாண்டர்ட் அண்டு பூர்ஸ் (எஸ் அண்டு பி.,), பொருளாதார வளர்ச்சியில் தேக்க நிலை, உறுதியான பொருளாதார கொள்கைகளை உருவாக்கத் தேவையான அரசியல் சூழ்நிலை இல்லாதது போன்றவற்றால், இந்தியாவில் மேற்கொள்ளப்படும் முதலீட்டிற்கான தரக்குறியீடு குறைக்கப்பட வாய்ப்புள்ளது என்ற எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டது.இந்த அறிவிப்புக்கு பிறகு, இந்தியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சுணக்கம் கண்டது.