தேடல்

சிங்கம்புணரியில் ஆண்கள் சுகாதார வளாகம்

சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் 10 லட்ச ரூபாயில் ஆண்கள் சுகாதார வளாகம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கிராம ஊராட்சிகளில் பெண்கள் சுகாதார வளாகங்கள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளன. பட்ஜெட்டில் அறிவித்தபடி முதல் முறையாக, சிங்கம்புணரி ஒன்றியம் பிரான்மலை, மு.சூரக்குடி கிராம ஊராட்சிகளுக்கு தலா 5 லட்ச ரூபாயில் ஆண்கள் சுகாதார வளாகம் கட்ட அரசு நிதி ஒதுக்கியுள்ளது. இங்கு குளியல் அறை, கழிப்பறை கட்டப்படும்.