சென்னை அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா!

சென்னை அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.பட்டமளிப்பு விழாவுக்குப் பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவஹர் தலைமை வகித்தார். தேசிய அங்கீகார வாரிய (என்.பி.ஏ.) உறுப்பினர் செயலர் டி.கே. பாலிவால், மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

விழாவில் பேசிய அவர் : நீடித்த பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் உயர் கல்வித் திட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவர வேண்டும் என கூறினார். உலகில் வேகமான பொருளாதார வளர்ச்சி அடைந்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி இரட்டை இலக்க அளவை எட்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நமது பொருளாதார நிபுணர்களிடையே உள்ளது. இந்த வளர்ச்சி தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு நீடிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. இந்த நிலையை எட்ட பொருளாதாரம் மிகப் பெரிய அளவில் வளர வேண்டும். உயர்கல்வியில், குறிப்பாக, பொறியியல் தொழில்நுட்பக் கல்வி பாடத்திட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவர வேண்டும் என்றார் அவர்.