புதுடில்லி:ஆறாவது ஐ.பி.எல்., தொடருக்கான வீரர்கள் ஏலம், பிப்., 3ம் தேதி சென்னையில் நடக்கவுள்ளது.இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) சார்பில் ஆண்டு தோறும் உள்ளூர் அணிகள் பங்கேற்கும் டுவென்டி-20 கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான 6வது ஐ.பி.எல்., தொடர், ஏப். 3ம் தேதி முதல் மே 26ம் தேதி வரை நடக்கவுள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் உள்ளிட்ட 9 அணிகள் பங்கேற்கின்றன.இத்தொடருக்கான அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. ஏப். 3ம் தேதி கோல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கவுள்ள முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் கோல்கட்டா நைட்ரைடர்ஸ், டில்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதுகின்றன. பைனல், மே 26ம் தேதி கோல்கட்டாவில் நடக்கவுள்ளது.இத்தொடருக்கான வீரர்கள் ஏலம், அடுத்த மாதம் 3ம் தேதி சென்னையில் நடக்கவுள்ளது. இதில், 37 வீரர்களின் பெயர்கள் ஏலத்தில் பரிந்துரை செய்யப்படலாம் எனத் தெரிகிறது.இதுகுறித்து ஐ.பி.எல்., தொடரின் உயர் அதிகாரி சுந்தர் ராமன், டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில், ஆறாவது ஐ.பி.எல்., தொடருக்கான வீரர்கள் ஏலம், பிப்., 3ம் தேதி சென்னையில் காலை 11 மணிக்கு துவங்கும், என, குறிப்பிட்டுள்ளார்.
சென்னையில் ஐ.பி.எல்., ஏலம்
தினமலர் – வி, 17 ஜன., 2013சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
புன்னகைபயணம்
10 புகைப்படங்கள் - 8 மணிநேரம் முன்உலகம்-22-05-2013
23 புகைப்படங்கள் - 8 மணிநேரம் முன்அரசியல்-22-05-2013
16 புகைப்படங்கள் - 8 மணிநேரம் முன்பொது-22-05-2013
15 புகைப்படங்கள் - 8 மணிநேரம் முன்சம்பவம்-22-05-2013
12 புகைப்படங்கள் - 9 மணிநேரம் முன்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
பிரிமியர் கிரிக்கெட்டை பி.சி.சி.ஐ., சுத்தப்படுத்த வேண்டும்: ஜிதேந்திரா சிங்
தினமலர் - 48 நிமிடங்கள் முன்பக்திமார்க்கத்தில் இறங்கினார் சிம்பு...!
தினமலர் - 1 மணிநேரம் 0 நிமிடங்கள் முன்மீண்டும் ஹீரோவாகிறார் கரு.பழனியப்பன்!
தினமலர் - 1 மணிநேரம் 40 நிமிடங்கள் முன்வருகிறது சுசூகியின் 250 சிசி பைக்
தினமலர் - 1 மணிநேரம் 55 நிமிடங்கள் முன்சில்க் ஸ்மிதாவே ரோல் மாடலாக எடுத்துக்கொண்டு சாதிக்கப்போகிறேன்! - சனாகான்
தினமலர் - 2 மணிநேரம் 1 நிமிடம் முன்
மிகவும் பிரபலமான புகைப்படங்கள்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4

