சாதனைகளைக்கூறி ஓட்டு: பன்னீர் செல்வம் வலியுறுத்தல்

தூத்துக்குடி: ஜெ., ஆட்சியின் எட்டுமாத சாதனைகளைக்கூறி ஓட்டுக்கேட்க வேண்டுமென, அ.தி.மு.க.,வினரை நிதிஅமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தினார். சங்கரன்கோவில் இடைத்தேர்தல் தொடர்பாக அ.தி.மு.க., ஆலோசனைக்கூட்டம் இன்று கோவில்பட்டியில் நடந்தது. அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். அமைச்சர்கள் செங்கோட்டையன், செந்தூர்பாண்டியன், செல்லப்பாண்டியன், ராஜேந்திர பாலாஜி மற்றும் வேட்பாளர் முத்துச்செல்வி, தேர்தல்பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர். இதில் பேசிய அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், ஸ்பெக்ட்ரம் ஊழல், கடந்த தி.மு.க., குடும்ப ஆட்சியின் அவலங்களையும், தற்போதைய எட்டுமாத ஜெ., ஆட்சியில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் மூலம் செய்யப்பட்ட சாதனைகளையும்கூறி, வாக்காளர்களிடம் ஓட்டுக்கேட்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அ.தி.மு.க., இரும்பு கோட்டை. அதை யாராலும் அசைக்க முடியாது. கடுமையாக உழைத்து நமதுவேட்பாளரை வெற்றிபெற செய்யவேண்டும், என்றார்.