தேடல்

சினிமாவில் ஆர்வம் இல்லை! சின்னத்திரை தொகுப்பாளினி ரம்யா பளீச்!!

சினிமாவில் நடிக்க நிறைய அழைப்பு வருகிறது; ஆனால் எனக்கு அதில் ஆர்வம் இல்லை என்று சின்னத்திரை தொகுப்பாளினி ரம்யா கூறியுள்ளார். விஜய் டி.வி.யில் பிரபல தொகுப்பாளியாக இருப்பவர் ரம்யா. இவர் தொகுத்து வழங்கும் உங்களில் யார் அடுத்த பிரபுதேவா சீசன் 2, நம்ம வீட்டு கல்யாணம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள், ரசிகர்களை ரொம்பவே கவர்ந்துள்ளது. ஏராளமான ரசிகர்கள் ரம்யாவின் தொகுப்பை புகழ்ந்து தள்ளி கடிதம் எழுதி வருகிறார்கள்.

இது குறித்து ரம்யா அளித்துள்ள பேட்டியில், வைஷ்ணவா கல்லூரியில் விஷூவல் கம்யூனிகேசன் முடித்த பிறகு மாடலிங் செய்து வந்தேன். அப்போதுதான் காம்பயரிங்கில் ஆர்வம் வந்தது. காம்பயரிங் ஒன்றும் சுலபமான வேலை அல்ல. எவ்வளவு பெரிய ஆட்கள் வந்தாலும் எங்களைத்தான் எல்லோரும் கவனிப்பார்கள். காம்பயரிங் செய்யும்போது தமிழில் பேசுவதையே விரும்புகிறேன். சினிமாவில் நடிப்பதற்கு தினமும் அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால் அதில் எனக்கு ஆர்வம் சுத்தமாக இல்லை. சினிமாதான் வாழ்க்கையென்று கிளம்பியிருந்தால், இதுவரை நிறைய படங்களில் என்னையும் சராசரி நடிகையாக இந்த உலகம் பார்த்திருக்கும், என்று கூறியுள்ளார்.