சீனியர் நடிகர்களுடன் நடித்தால் கிழவி என்பதா? த்ரிஷா கோபம்!

கமல், சிரஞ்சீவி உள்ளிட்ட சீனியர் நடிகர்களுடன் ஜோடியாக நடித்ததால் என்னை கிழவியாக பார்க்கக் கூடாது என்று நடிகை த்ரிஷா கேட்டுக் கொண்டுள்ளார். த்ரிஷாவுக்கு வயதாகி விட்டதால் இளம் நடிகர்கள் அவருக்கு ஜோடியாக நடிக்க தயங்குவதாக சமீப காலமாக செய்திகள் வெளியாகி வருகின்றன. த்ரிஷாவும் அவ்வப்போது மறுப்பு தெரிவித்து வருகிறார். இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியில், நடிகர், நடிகைளுக்கு வயது என்பது பிரச்னையே இல்லை. நான் வயது வித்தியாசம் பார்க்காமல் எல்லா ஹீரோக்களுடனும் நடிக்கிறேன். நடிகைகள் கவனிக்க வேண்டியது கதையும், கேரக்டரும்தான். இரண்டும் சிறப்பாக அமைந்தால் யாருடன் வேண்டுமானாலும் நடிக்கலாம், என்று கூறியுள்ளார்.

மேலும், நான் 50 வயதை தாண்டிய கமல், சிரஞ்சீவி, நாகார்ஜுனா போன்றோருக்கு ஜோடியாக நடித்துள்ளேன். இதை வைத்து என்னை வயதான நடிகையாக பார்க்க கூடாது. அஜித், பவன்கல்யாண், ரவிதேஜா போன்ற 40 வயதுக்கும் மேற்பட்ட நடிகர்களுடனும் விஜய், பிரபாஸ், மகேஷ்பாபு போன்ற 30 வயதுக்கும் மேற்பட்ட நடிகர்களுடனும் நடித்துள்ளேன். சிம்பு, ஜூனியர் என்.டி.ஆர். போன்ற 20 வயதுக்கு மேற்பட்ட இளம் ஹீரோக்களுடனும் ஜோடியாக நடித்துள்ளேன். இளம் வயதினருடன்தான் நடிப்பேன். மூத்தவர்களுடன் நடிக்க மாட்டேன் என்றெல்லாம் நிபந்தனைகள் விதிப்பது இல்லை. அப்படி நிபந்தனை விதித்து இருந்தால் நல்ல படங்களை இழந்து இருப்பேன். சினிமாவிலும் நீடித்து இருக்க முடியாது, என்று வயது வாரியாக லீஸ்ட் போட்டிருக்கிறார் த்ரிஷா.

சீனியர்களுடன் நடித்த நடிகைகளை வயதான நடிகையாக பார்ப்பது பிரமைததான் என்று கூறியிருக்கும் த்ரிஷா, சினிமாவில் திறமைதான் முக்கியம் இந்தியில் அமிதாப்பச்சன் ஜோடியாக நடிக்க கரீனாகபூர் வரை எல்லா நடிகைகளும் விரும்புகின்றனர். அது போன்ற கலாசாரம் தமிழ் திரையுலகிலும் வர வேண்டும், என்றும் கூறியுள்ளார்.