சானியா ஜோடி சாம்பியன்

பட்டாயா: பட்டாயா ஓபன் டென்னிஸ் தொடரின் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா, ஆஸ்திரேலியாவின் அனஸ்டாசியா ரோடியானோவா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
தாய்லாந்தில் பட்டாயா ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் இரட்டையர் பைனலில் சானியா மிர்சா, அனஸ்டாசியா ஜோடி, சீன தைபேயின் ஹாவ்-சிங் சான், யங்-ஜான் சான் ஜோடியை சந்தித்தது. விறுவிறுப்பாக நடந்த இப்போட்டியில், ஒரு மணி நேரம் 6 நிமிட போராட்டத்துக்கு பின் சானியா, அனஸ்டாசிய ஜோடி 3-6, 6-1, 10-8 என்ற செட்களில் வெற்றி பெற்று, கோப்பையை கைப்பற்றியது.