சென்னை:பிரதமர் மன்மோகன் சிங், சோனியா உருவ பொம்மை எரிப்பு போராட்டத்தில் ஈடுபடுபவர்களை, போலீசார் வேடிக்கை பார்க்கும் நிலை நீடித்தால், காவல் நிலையங்கள் முன், முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என, இளைஞர் காங்கிரசார்
தெரிவித்தனர்.
சமீபத்தில், டில்லியில் நடந்த தேசிய வளர்ச்சிக் கூட்டத்தில்பங்கேற்ற முதல்வர் ஜெயலலிதா, தன்னை பேச அனுமதிக்காமல், மத்திய அரசு அவ
மரியாதை செய்துவிட்டது என, குற்றம்சாட்டினார்.
இதை தொடர்ந்து, பிரதமர் மற்றும் சோனியாவின் உருவ பொம்மைகளை எரித்து, தமிழகம் முழுவதும், அ.தி.மு.க.,வினர் போராட்டத்தில் ஈடுபட்டு
வருகின்றனர்
இது தொடர்பாக,தமிழக இளைஞர் காங்., தலைவர்யுவராஜ் தலைமையில்,டி.ஜி.பி., ராமானுஜத்
திடம் நேற்று அளிக்கப்பட்ட மனு விவரம்:
டில்லியில் தேசிய வளர்ச்சிக் கூட்டத்தில்
பங்கேற்ற முதல்வர், அந்த கூட்டத்தின் மரபை மீறி செயல்பட்டது, தமிழகத்திற்கு தலைக்குனிவை
ஏற்படுத்தியுள்ளது.
இதை அரசியலாக்கும் நோக்கத்துடன், அ.தி.மு.க.,வினர், பிரதமர் மன்மோகன், சேனியாவின் உருவ பொம்மைகளை எரித்து வருகின்றனர். இவர்கள் மீது, நடவடிக்கை எடுக்காமல், போலீசார் வேடிக்கைப்பார்த்து வருகின்றனர். உருவ பொம்மை எரிப்பு போராட்டம் நடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோனியா உருவ பொம்மை எரிப்பு டி.ஜி.பி.,யிடம் இளைஞர் காங்., புகார்
தினமலர் – தி, 31 டிச., 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம் 24-5-2013
19 புகைப்படங்கள் - 2 மணிநேரம் 15 நிமிடங்கள் முன்தமிழகம் 24-5-2013
25 புகைப்படங்கள் - 2 மணிநேரம் 26 நிமிடங்கள் முன்பொது 24-5-2013
19 புகைப்படங்கள் - 2 மணிநேரம் 31 நிமிடங்கள் முன்சம்பவம் 24-5-2013
15 புகைப்படங்கள் - 2 மணிநேரம் 35 நிமிடங்கள் முன்அரசியல் 24-5-2013
17 புகைப்படங்கள் - 2 மணிநேரம் 41 நிமிடங்கள் முன்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
கெட்டப்பை மாற்றி களமிறங்கினார் கடல் கெளதம்!
தினமலர் - 55 நிமிடங்கள் முன்தங்கம் விலை சவரனுக்கு ரூ.96 உயர்வு
தினமலர் - 1 மணிநேரம் 34 நிமிடங்கள் முன்சென்னை அணி விளையாடிய போட்டிகளில், சைடில் விளையாடிய மெய்யப்பன்
தினமலர் - 2 மணிநேரம் 43 நிமிடங்கள் முன்மலையாளத்தில் ஸ்ரீசாந்தின் கிரிக்கெட் சூதாட்டத்தை மையப்படுத்தி புதிய படம்!
தினமலர் - 3 மணிநேரம் முன்ஆசிய கால்பந்து:இந்தியா மீண்டும் தோல்வி
தினமலர் - 3 மணிநேரம் முன்
மிகவும் பிரபலமான புகைப்படங்கள்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
