தேடல்

சீனாவில் கடுமையான பூகம்பம்: 2 பேர் பலி

பீஜிங்: சீனாவின் தெற்கு பகுதியில் உள்ள மலைப்பகுதியில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தில் 2 பேர் பலியானார்கள். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சீனாவின் யூனான் மாகாணத்தின் நிங்லாங் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஏற்பட்ட சேதம் ஏற்பட்டுள்ளதாக அரசு செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறினார். சம்பவ இடத்திற்கு மீட்பு பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். நிவாரண பொருட்களும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.