கள்ளக்குறிச்சி:சோமண்டார்குடி வழியாக புதிய வழித்தடத்தில் செல்லும் சென்னை
அரசு பஸ்சை நேற்று அரசு கொறடா மோகன் துவக்கி வைத்தார்.கச்சிராயபாளையத்தில்
இருந்து சோமண்டார்குடி வழியாக புதிய வழித்தடத்தில் சென்னைக்கு செல்லும்
அரசு பஸ்சை அரசு கொறடா மோகன் எம்.எல்.ஏ., கொடியசைத்து துவக்கி
வைத்தார்.நிகழ்ச்சியில் சேர்மன்கள் கள்ளக்குறிச்சி ராஜசேகர், சங்கராபுரம்
அரசு, கள்ளக்குறிச்சி அரசுபோக்குவரத்து கழக பணிமனை கிளை மேலாளர்கள்
துரைசாமி, கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட கவுன்சிலர் மணி, ஊராட்சி தலைவர்
இளங்கோவன், துணைத் தலைவர் மாதையன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
