விருதுநகர் :விருதுநகர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் சார்பில், மாவட்ட செயற்குழு கூட்டம், மாவட்ட துணை தலைவர் ஏ.ராமசாமி தலைமையில் நடந்தது. பிப். 28 ல் நடைபெறும் பொது வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்வது என, முடிவெடுக்கப் பட்டுள்ளது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் தயாளன் வரவேற்றார்.
மாவட்ட தலைவர் முருகேசன், மாவட்ட பொருளாளர் வி. குமாரவேலு, செயற்குழு உறுப்பினர் ஆர். ஜெயச்சந்திரன் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
