சிருங்கேரி சுவாமிகள் கோவை வருகை

கோவை :ரேஸ்கோர்ஸ், ஸ்ரீ சாரதாம்பாள் கோவில்,மகா கும்பாபிஷேக விழா முன்னிட்டு, சிருங்கேரி, ஸ்ரீ பாரதீதீர்த்த மகாசுவாமிகள், மார்ச் 20ம் தேதி, கோவை வருகிறார்.
சிருங்கேரி, ஸ்ரீ சாரதா பீடம் கோவை கிளை நிர்வாகிகள் கூறியதாவது:
ரேஸ்கோர்ஸ் ஸ்ரீ சாரதாம்பாள் கோவில், மகா கும்பாபிஷேக விழா, ஏப்.,1ல் சிருங்கேரி, ஸ்ரீ பாரதீதீர்த்த மகா சுவாமிகள் தலைமையில் நடக்கிறது. மார்ச் 20ம் தேதி, அவர் கோவை வருகிறார். ஏப்., 4ம் தேதி வரை, கோவையில் தங்கியிருப்பார்.

சுவாமிகளின் விஜய யாத்ரா மற்றும் 62வது வருதந்தி (ஜெயந்தி) விழா, ரேஸ்கோர்ஸ் சாரதாம்பாள் கோவில் வளாகத்தில், மார்ச் 20 முதல் ஏப்., 4ம் தேதி வரை நடக்கிறது. நாள்தோறும் ஷத்தசண்டி ஹோமம், மஹாருத்ர யாகம், சகஸ்ர மோதக கணபதி ஹோமம், ஸ்ரீ நரசிம்மபாரதீ மகா சுவாமிகள் ஆராதனை, வசந்த நவராத்திரி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
தினமும், காலை 10.00 முதல் மதியம் 12.00 மணி வரை, சுவாமிகளை தரிசித்து ஆசி பெறலாம். மாலை 4.30 முதல் இரவு 7.45 மணி வரை, கலை
நிகழ்ச்சிகளும், இரவு 8.00 மணிக்கு, ஸ்ரீ சந்திரமவுலீஸ்வரா பூஜையும் நடக்கிறது.
சுவாமிகளுக்கு, மார்ச் 20ம் தேதி மாலை திருச்சி ரோடு,ரேஸ்கோர்ஸ் சந்திப்பு பகுதியில்,பட்டன பிரவேச ஊர்வலம் நடத்தப்படுகிறது. அன்று இரவு 7.00 மணிக்கு, சுவாமிகள் சிறப்பு சொற்பொழிவாற்றுகிறார்.
விபரங்களுக்கு 99444 12324, 98422 48001, 98943 23217 ஆகிய, மொபைல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.