தேடல்

சாராயம் கடத்தல் இருவர் கைது

ஆத்தூர்: ஆத்தூர் அருகே சாராயம் கடத்திய வாலிபர் உள்ளிட்ட இருவரை, போலீஸார் கைது செய்தனர்.
ஆத்தூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸார், ஆத்தூர், தலைவாசல் ஆகிய பகுதிகளில், ரெய்டு நடத்தினர். அப்போது, கல்லாநத்தம் ஏரிக்கரை வழியாக அதிவேகமாக சென்ற மொபட்டை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
மொபட்டில், 55 லிட்டர் சாராயம் கடத்திச் சென்றது தெரியவந்தது. மொபட்டை ஓட்டிச் சென்ற செட்டில்மென்டைச் சேர்ந்த ராஜவேல் (29) என்பவரை கைது செய்தனர்.அதேபோல், சாத்தப்பாடி கிராமத்தில், சுடுகாட்டில் உள்ள புதரில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த, எட்டு லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து, செல்வி (37) என்பவரை, போலீஸார் கைது செய்தனர்.