தாண்டிக்குடி : வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை குறைவு எதிரொலியாக ஆந்தோரியம் கொய்மலர்களின் உற்பத்தி தொய்வை சந்தித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி அருகே உள்ள தடியன்குடிசையில் ஆந்தோரியம் கொய்மலர்கள் அதிகளவு உற்பத்தி செய்யப்படுகிறது.
தரம் மிகுந்த பூக்களுக்கு மார்க்கெட்டில் தனி மவுசு உண்டு. ஒரு மாதம்வரை வாடாமல் தண்ணீர் நிரப்பப்ட்ட பாட்டீல்களில் அழகுற காட்சியளிப்பதால் நட்சத்திர ஓட்டல்களில் அலங்கார பயன்பாட்டுக்கு அதிகளவு பயன்படுகிறது. சராசரியாக ஆண்டுக்கு 8 பூக்கள் பூக்கும் ஒரு பூ ரூ.7 முதல் 10 வரை விலை கிடைக்கும். நடவு செய்து ஒன்றை ஆண்டுகளில் பூக்க துவங்கி 5 ஆண்டுகள் வரை பூத்து பலன் தரும்.
சரிவு: சுற்றுலா பயணிகளின் வருகை கணிசமாக குறைந்துள்ளது. இதையடுத்து நட்சத்திர ஓட்டல்களில் ஆந்தோரியம் பூக்களின் பயன்பாடு குறைந்துள்ளது.
விவசாயிசேகர் நாகராஜன் கூறுகையில்: ஆந்தோரியம் பூக்களுக்கு நல்ல மார்க்கெட் இருந்த நிலையில் பல்வேறு காரணங்களால் கடந்த 2 ஆண்டுகளாக சரிவை சந்தித்துள்ளது. தரமிகுந்த ஹாலந்து ஆந்தோரியம் நாற்றுக்கள் கிடைக்காததன் விளைவு பூ உற்பத்தி வீழ்ச்சியடைய காரணமாகும்,என்றார்.
சுற்றுலா பயணிகள் வருகை குறைவு ஆந்தோரியம் பூக்களின் உற்பத்தியில் தொய்வு
தினமலர் – வி, 28 ஜூன், 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம் 24-5-2013
19 புகைப்படங்கள் - 13 மணிநேரம் முன்தமிழகம் 24-5-2013
25 புகைப்படங்கள் - 13 மணிநேரம் முன்பொது 24-5-2013
19 புகைப்படங்கள் - 13 மணிநேரம் முன்சம்பவம் 24-5-2013
15 புகைப்படங்கள் - 13 மணிநேரம் முன்அரசியல் 24-5-2013
17 புகைப்படங்கள் - 13 மணிநேரம் முன்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
கிரிக்கெட்: மும்பை அணி 112/1
தினமலர் - 35 நிமிடங்கள் முன்கிரிக்கெட்: மும்பை அணி 18/0
தினமலர் - 1 மணிநேரம் 25 நிமிடங்கள் முன்சீனிவாசன் பதவி விலக வேண்டும் : வலுக்கிறது எதிர்ப்பு
தினமலர் - 1 மணிநேரம் 47 நிமிடங்கள் முன்டிராவிட்டுக்கு அவுட் கொடுத்த அசாத்
தினமலர் - 1 மணிநேரம் 53 நிமிடங்கள் முன்வெள்ளி வென்றார் பத்ரா
தினமலர் - 1 மணிநேரம் 57 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான புகைப்படங்கள்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
