தேடல்

சுற்றுலா மையங்களின் தேவை: மத்திய வல்லுனர் குழு சர்வே

கொடைக்கானல்: சுற்றுலா மையங்களில் பூர்த்தி செய்யப்படவேண்டிய அடிப்படை தேவை குறித்து மத்திய வல்லுனர் குழு கொடைக்கானலில் ஆய்வு செய்தது.தமிழகத்தில் உள்ள சுற்றுலா இடங்களில் உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள், இங்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து மத்திய அரசு சர்வே நடத்துகிறது.வருகை: சுற்றுலா அமைச்சக கண்காணிப்பு குழு தலைவர் ஸ்ரீகாந்த் தலைமையிலான வல்லுனர் குழு கொடைக்கானல் வந்தது. கோக்கர் வாக், பில்லர் ராக், பசுமை பள்ளத்தாக்கு, பிரையண்ட் பூங்கா, ஏரி, குறிஞ்சி ஆண்டவர் கோயில் பகுதியில் ஆய்வு செய்தது. அதிகாரி ஒருவர் கூறுகையில்,சுற்றுலா இடங்களில் உள்ள ஓட்டல்கள், கழிப்பறை, ரோடு வசதி குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதற்கான அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். அதன்பின் வசதிகள் செய்து தரப்படும், என்றார்.இக்குழு திண்டுக்கல் மலைக்கோட்டை, பழநியில் புதிதாக அமையவுள்ள ரோப் கார் வழித்தடம் ஆகியவற்றை ஆய்வு செய்தது.