சேலம்: சேலம் குகை மாரியம்மன் காளியம்மன் கோவிலின் ஆடி பண்டிகையின் போது, கலவரம் ஏற்படுத்த முயற்சி மேற் கொள்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, போலீஸ் கமிஷனர் மாஹாலியிடம், குகை மாரியம்மன் காளியம்மன் பக்த பொது ஜன நல டிரஸ்டின் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சேலம் குகை மாரியம்மன் காளியம்மன் பக்த பொது ஜன நல டிரஸ்டின் தலைவர் சுந்தரம் செட்டியார், துணைத் தலைவர் சீத்தாராமன், செயலாளர் உதயசரவணன் ஆகியோர் போலீஸ் கமிஷனர் மாஹாலியிடம் புகார் மனு அளித்தனர். அந்த மனுவின் விபரம்:சேலம், குகையில் உள்ள காளியம்மன், பழைய கோவிலின் மூல ஸ்தானத்தில் உள்ள பழைய காளியம்மன் சிலை வைப்பது தொடர்பாக, இந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். அந்த வழக்கை ஏற்க மறுத்து விட்டனர்.அதை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில், குகை மாரியம்மன் காளியம்மன் பக்த பொது ஜன நல டிரஸ்ட்டு சார்பாக, செயலாளர் உதயசரவணன் வழக்கு தொடர்ந்தார். உயர்நீதிமன்றம் அந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டு, 12 வார காலத்திற்குள் விசாரணை செய்து முடிக்கும் படி, சேலம் மண்டல இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில், கோவிலின் செயல் அலுவலர் ஞானமணி, பூசாரி கார்த்திகேயன், இறைபணி மன்றத்தின் தலைவர் ராஜேந்திரன், ராஜண்ணன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் எங்களுடை குகை மாரியம்மன் காளியம்மன் பக்த பொது ஜன நல டிரஸ்ட்டு செயலாளர் உதயசரவணன், 25 ஆண்டுகளுக்கும் மேலாக செய்து வரும் கம்பம் எடுத்து வரும் தொண்டை செய்யக் கூடாது என்றும், துணைத் தலைவர் சீத்தாராமன் வீட்டில் இருந்து கொடித்துணியை எடுத்து வரக் கூடாது என்கின்றனர்.மீறி எடுத்து வந்தால் அடித்து துரத்தப்படுவர் என, கூறி வருகின்றனர். மேலும் குகை மாரியம்மன் காளியம்மன் பக்த பொது ஜன நல டிரஸ்ட்டை சேர்ந்த யாரும் கோவிலுக்குள் வரக் கூடாது எனவும் கூறுகின்றனர். ரவுடிகளையும், அடியாட்களையும் வைத்து எங்களை கோவிலுக்கு வரக் கூடாது என தொடர்ந்து மிரட்டி வருகின்றனர்.
ஆடிப் பண்டிகை காலங்களில் பரம்பரை பரம்பரையாக கொடித்துணி எடுத்து வரும் பாத்தியத்தை செய்து கொண்டு வருககிறோம். இதை தடுத்து நிறுத்தவும், தேவையில்லாமல் வன்முறையை தூண்டி விட்டு, ஊருக்குள் கலவரத்தை ஏற்படுத்தவும் முயற்சி செய்கின்றனர்.மேலும், நாங்கள் ஆடி பண்டியை நடத்த, சென்னை உயர்நீதிமன்றத்தில் தடை ஆணை பெற்றுள்ளதாக தவறான செய்தியை பொதுமக்களிடம் பரப்பி வருகின்றனர். எங்களுடைய குகை மாரியம்மன் காளியம்மன் பக்த பொது ஜன நல டிரஸ்டின் நற்பெயரை கெடுக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்படுகின்றனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் நாங்கள் தொடர்ந்து உள்ள வழக்கை வாபஸ் பெற வேண்டும் என, மிரட்டுகின்றனர்.எனவே, திருவிழா காலத்தில், குறிப்பாக கொடித்துணியை எடுத்து வரும் போது, எவ்வித அசம்பாவிதம், கலவரங்கள் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கும் படி கேட்டுக் கொள்கிறோம்.இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறி உள்ளனர்.
சேலம் கோவில் பண்டிகையில் கலவர அபாயம்
தினமலர் – வெ, 20 ஜூலை, 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உதய் கிரண்
4 புகைப்படங்கள் - 9 மணிநேரம் முன்ஸ்ருதிஹாசன்
8 புகைப்படங்கள் - 9 மணிநேரம் முன்காவ்யா ஷெட்டி
4 புகைப்படங்கள் - 9 மணிநேரம் முன்சானாகான்
15 புகைப்படங்கள் - 10 மணிநேரம் முன்ஒளரங்கசீப்
13 புகைப்படங்கள் - 10 மணிநேரம் முன்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
பைனலுக்கு முன்னேறுமா ராஜஸ்தான் : இன்று மும்பையுடன் மோதல்
தினமலர் - 45 நிமிடங்கள் முன்மற்ற அணிகளுக்கும் தொடர்பா : டில்லி கமிஷனர் அதிர்ச்சி தகவல்
தினமலர் - 49 நிமிடங்கள் முன்அவமானத்தால் தலைகுனிவு : மத்திய அமைச்சர் வேதனை
தினமலர் - 55 நிமிடங்கள் முன்மீண்டும் வெட்டோரி
தினமலர் - 59 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
