"கல்வி வளர்ச்சியை அதிகப்படுத்துவேன்!' முதல் முயற்சியிலேயே டெபுடி கலெக்டர் ஆகியுள்ள ஜனனி: சொந்த ஊர் பட்டுக்கோட்டை என்றாலும், பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னை தான். நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த எனக்கு, சின்ன வயதில் இருந்தே, கலெக்டராக வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதே போல், பிளஸ் 2விற்குப் பின், என் படிப்பை, ஐ.ஏ.எஸ்., கனவை நோக்கியதாகவே அமைத்துக் கொண்டேன். கல்லூரியில், பி.எஸ்.சி., மைக்ரோபயாலஜி படித்தேன். அறிவியல் தொடர்பான, அனைத்து விஷயங்களின் அடிப்படைகளை தெரிந்து கொள்ள, இது உதவியாக இருந்தது. அடுத்ததாக வேலைக்குச் சென்றாக வேண்டிய கட்டாயம். எனவே, எம்.எஸ்.சி., படிக்கும் யோசனையை விட்டு, ஷேர் புரோக்கிங் நிறுவனத்தில் சேர்ந்தேன். கூடவே, அஞ்சல் வழிக்கல்வி மூலம் பொது நிர்வாகம், படித்தேன். மற்ற மாநில மக்களுக்காக உழைப்பதைவிட, தமிழக மக்களுக்காக உழைப்பது சந்தோஷம் தருவதாக இருக்கும் என்பதால், டி.என்.பி.எஸ்.சி., தேர்வு பக்கம் திருப்பினேன். நான் முதல் முறை தேர்வு எழுதும் போதே, இது தான் கடைசி வாய்ப்பு என்று நினைத்து எழுதினேன். கடும் உழைப்பிற்குப் பலனாக, தமிழக அளவில், 11வது இடத்தைப் பிடித்து, டெபுடி கலெக்டர் பதவியையும் பெற்றுவிட்டேன். தமிழகம் முழுக்கப் பல ஆயிரம் சுய உதவிக் குழுக்கள் உள்ளன. இதில் பெயர் சொல்லும் படி, சில, நூறு மட்டுமே உள்ளன. மற்ற குழுக்களுக்கு என்ன பிரச்னை, ஏன் அவர்களால் இன்னும் சிறப்பாக செயல்பட முடியவில்லை என்பதைக் கண்டறிந்து, அவர்களுக்கு உதவ முயல்வேன். முக்கியமாக, நான் எந்த மாவட்டத்தில் பணியாற்றுகிறேனோ, அந்த மாவட்டத்தில் 1 சதவிகிதமாவது கல்வி வளர்ச்சியை அதிகப்படுத்துவேன்.
சொல்கிறார்கள்
தினமலர் – வெ, 11 நவ., 2011சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
சந்தமாமா
6 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012ஓட ஓட காதல் குறையல்ல
10 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012சமர்
6 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012இதயம் திரையரங்கம்
7 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012சினேகா - பிரசன்னா திருமணம்
15 புகைப்படங்கள் - வெ, 11 மே, 2012
தொடர்புடைய செய்திகள்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
இயற்கை உரங்களுக்கு முக்கியத்துவம்...ரசாயன உர மானியத்தை குறைக்க திட்டம்
தினமலர் - 48 நிமிடங்கள் முன்பால் பவுடர் ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்க பரிசீலனை
தினமலர் - 49 நிமிடங்கள் முன்ஆலங்குளம், அரியலூர் சிமென்ட் ஆலைகளைமேம்படுத்த தமிழக அரசு ரூ.515 கோடி ஒதுக்கீடு
தினமலர் - 50 நிமிடங்கள் முன்சென்னை அருகே தொழில் நகரியம்
தினமலர் - 50 நிமிடங்கள் முன்வெள்ளை நிற கார்களுக்கு மவுசு-
தினமலர் - 51 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
