சாப்பிட தூண்டும் மீன் ஊறுகாய்!
கடல் உயிரினங்களில் இருந்து, ஊறுகாய், நூடுல்ஸ் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள, தூத்துக்குடி மாவட்ட மகளிர் சுய உதவிக் குழு செயலர் தொம்மை இன்னாசி: நாங்கள் மீன்பிடி தொழில் சார்ந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். எனவே, நல்ல மீன்களை கண்டுபிடித்து, விலை குறைத்து வாங்குவோம். வாங்கிய மீன்களை சுத்தம் செய்து, தண்ணீரில் வேக வைத்து விடுவோம். மீனின் தலை மற்றும் முட்களை அகற்றிவிட்டு, சதைப் பகுதிகளை மட்டும், ஊறுகாய்க்கு பயன்படுத்துவோம்.மீன் ஊறுகாய்க்கு, முக்கியமாக தேவைப்படும் பொருள், இஞ்சியும், பூண்டும் தான். இவற்றுடன், காய்ந்த மிளகாய் வத்தல் பொடி, மஞ்சள் பொடி மற்றும் கறி மசாலா பொடிகளையும் சேர்த்து, ஊறுகாய் செய்கிறோம்.இதே போலத் தான், இறால் ஊறுகாய், கணவாய் ஊறுகாய், நண்டு ஊறுகாய் தயாரிக்கிறோம். மீன் ஊறுகாய் செய்வதற்கு தயார் செய்த பொருட்களை, அப்படியே நூடுல்ஸ் செய்வதற்கும் பயன்படுத்துகிறோம். மீன் ஊறுகாய் கலவையை, இடியாப்பம் செய்யும் குழலில் வைத்துப் பிழிந்து எடுத்தால், அது நூடுல்ஸ்.தற்போது, நாள் ஒன்றிற்கு, 50 கிலோ வரை ஊறுகாய் தயாரிக்கிறோம். இந்த அளவை, விரைவில் உயர்த்தி விடுவோம். எங்கள் குழுவில் உள்ள, 20 பேருக்கும், மாதம், 3,000 ரூபாய்க்கு குறையாமல், வருமானம் கிடைக்கிறது. தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோவில் மற்றும் சென்னையில் உள்ள சில சூப்பர் மார்க்கெட்டுகளுக்கும், சப்ளை செய்கிறோம். இப்போது, சென்னையில் இருந்து, புதிய ஆர்டர்கள் வந்து கொண்டிருக்கின்றன.சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா, இலங்கை ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய, சில தொண்டு நிறுவனங்களின் உதவியை நாடியிருக்கிறோம். ஒப்புதல் கிடைத்து விட்டால், வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய, தயாராக இருக்கிறோம்.
சொல்கிறார்கள்
தினமலர் – செ, 3 ஜூலை, 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
புன்னகைபயணம்
10 புகைப்படங்கள் - 2 மணிநேரம் 32 நிமிடங்கள் முன்உலகம்-22-05-2013
23 புகைப்படங்கள் - 2 மணிநேரம் 57 நிமிடங்கள் முன்அரசியல்-22-05-2013
16 புகைப்படங்கள் - 3 மணிநேரம் முன்பொது-22-05-2013
15 புகைப்படங்கள் - 3 மணிநேரம் முன்சம்பவம்-22-05-2013
12 புகைப்படங்கள் - 3 மணிநேரம் முன்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
நானும் ரவுடிதான்டா, கோதாவில் குதிக்கிறார் கொலவெறி அனிருத்!
தினமலர் - 46 நிமிடங்கள் முன்கார்த்திக்கிற்கான கதையை முடிவு செய்வது சூர்யாதானாம்!
தினமலர் - 50 நிமிடங்கள் முன்ஆன்டி முர்ரே விலகல்
தினமலர் - 53 நிமிடங்கள் முன்விமலின் கைவசம் 13 படங்கள் உள்ளதாம்!
தினமலர் - 57 நிமிடங்கள் முன்சூதாட்டத்தில் ஈடுபடவில்லை; நான் அப்பாவி : சொல்கிறார் ஸ்ரீசாந்த்
தினமலர் - 1 மணிநேரம் 18 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான புகைப்படங்கள்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4

