ஆத்தூர்: ஆத்தூரில் தி.மு.க., உறுப்பினர்கள் அட்டை வழங்கும் விழாவில் தி.மு.க.,வினர் மோதலால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தி.மு.க., உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் தி.மு.க., அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் வீரபாண்டி ராஜா, தி.மு.க., தலைமைக்கழக பொதுக்குழு உறுப்பினர் மணி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் தி.மு.க.,வினருக்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டது. அப்போது அங்கிருந்த ஆத்தூர் 9வது வார்டு கவுன்சிலர் ஸ்டாலின், உள்ளாட்சி தேர்தலில் சீட் கிடைக்காமல் தி.மு.க., வேட்பாளர்களுக்கு எதிராக சுயேட்சையாக போட்டியிட்டவர்களுக்கும், நகராட்சி துணை சேர்மன் தேர்தலில் அ.தி.மு.க.,விற்கு ஆதரவாக செயல்பட்ட தி.மு.க.,வை சேர்ந்த கவுன்சிலர் ஆயிஷா மற்றும் அவரது கணவர் கமால்பாட்ஷாவிற்கும் அடையாள அட்டை வழங்கக்கூடாது என கூறியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அவர்களை வீரபாண்டி ராஜா சமாதானம் செய்து ஸ்டாலினை அனுப்பி வைத்தார். ராஜா சென்றதும், மீண்டும் ஸ்டாலினுக்கும், கமால் பாட்ஷாவிற்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதில் ஸ்டாலின் வீரபாண்டி ஆறுமுகத்தின் ஆதரவாளர் என்றும், கமால் பாட்ஷா பனமரத்துப்பட்டி ராஜேந்திரனின் ஆதரவாளர் என்றும் கூறப்படுகிறது.
சேலத்தில் தி.மு.க., கூட்டத்தில் மோதலால் பரபரப்பு
தினமலர் – வெ, 4 ஜன., 2013சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம்-21-05-2013
4 புகைப்படங்கள் - 4 மணிநேரம் முன்தமிழகம்-21-05-2013
17 புகைப்படங்கள் - 4 மணிநேரம் முன்அரசியல்-21-05-2013
15 புகைப்படங்கள் - 4 மணிநேரம் முன்சம்பவம் 21-05-2013
5 புகைப்படங்கள் - 4 மணிநேரம் முன்பொது- 21-05-2013
9 புகைப்படங்கள் - 5 மணிநேரம் முன்
தொடர்புடைய செய்திகள்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
சங்கரா டி.வி.யில் மாணவர்களுக்கான நிகழ்ச்சி!
தினமலர் - 57 நிமிடங்கள் முன்ஸ்ரேயாவின் பேரு மட்டும்தான் பவித்ரா!
தினமலர் - 1 மணிநேரம் 20 நிமிடங்கள் முன்ஈரவெயில் ஆனது திருவாசகம்!
தினமலர் - 1 மணிநேரம் 24 நிமிடங்கள் முன்கச்சத்தீவை மீட்க வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் ஜெ., மீண்டும் கடிதம்
தினமலர் - 1 மணிநேரம் 41 நிமிடங்கள் முன்பெயரில் கும்கியை சேர்ந்த காமெடி நடிகர் அஸ்வின்!
தினமலர் - 1 மணிநேரம் 43 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான புகைப்படங்கள்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
