தேடல்

சிவகங்கை ரவுடி கொலையில் மூவர் சிக்கினர்: 7 பேரை போலீஸ் தேடுகிறது

சிவகங்கை:சிவகங்கை ரவுடி செல்வம் கொலையில் மூவர் சிக்கினர்.ஏழு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.சிவகங்கை அருகே வைரவன்பட்டியை சேர்ந்த ரவுடி செல்வம் நேற்றுவெட்டிக்கொலை செய்யப்பட்டார். சிவகங்கை முன்னாள் ஒன்றிய செயலாளர் பொன்னுசாமி கொலை வழக்கில் கோர்ட்டு விசாரணையில் ஆஜராக வந்தபோது, இக்கொலை நடந்தது. செல்வத்தின் தந்தை பாண்டியராஜன் கொடுத்த புகாரின்பேரில், சிவகங்கையை சேர்ந்த வக்கீல் ராஜா, பொன்னுசாமி மகன் தங்கபாண்டி, வைரவன்பட்டி முத்துபாண்டி,கருப்பையா, செந்தில், மணி, பெரியசாமி, சித்தலூர்,சுதாகரன்,வேலூர் அழகுபாண்டி, வைரவன்பட்டி ராஜேந்திரன் ஆகிய 10 பேர் மீது டவுன் போலீசார் வழக்கு பதிந்தனர்.இவர்களில் தங்கபாண்டி, கருப்பையா, செந்தில் ஆகிய மூவரையும் போலீசார் பிடித்துள்ளனர். அவர்களிடம் விசாரிக்கின்றனர். மற்றவர்களை தேடுகின்றனர்.ரவுடி செல்வம் கொலை சம்பவத்தில் கொலையாளிகள் பட்டியலில் வக்கீல் ராஜாவை முதல் பெயராக சேர்த்துள்ள போலீசாரை கண்டித்தும், அவரது பெயரை நீக்கக் வலியுறுத்தியும் சிவகங்கை வக்கீல்கள் இன்று கோர்ட் புறக்கணிப்பு செய்தனர்.