செஸ்: அபிஜீத் குப்தா டிரா

மாஸ்கோ:

ஏரோபிளாட் ஓபன் செஸ் தொடரின் ஏழாவது சுற்று போட்டியை இந்திய வீரர் அபிஜீத் குப்தா டிரா செய்தார்.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் ஏரோபிளாட் ஓபன் செஸ் தொடர் நடக்கிறது. ஏ பிரிவு ஏழாவது சுற்று போட்டியில் இந்தியாவின் அபிஜீத் குப்தா, சகவீரர் சேதுராமனை சந்தித்தார். இதில் 51வது நகர்த்தலின் போது, போட்டியை டிரா செய்ய சம்மதித்தனர்.
இந்தியாவின் சசிகிரண், அஜர்பெய்ஜானின் சபர்லி இடையிலான போட்டியும் டிரா ஆனது. மற்றொரு இந்திய வீரர் சாண்டீபன், ஆர்மீனியாவின் கரேனிடம் வீழ்ந்தார்.
ஏழு சுற்று போட்டிகளின் முடிவில் இந்திய வீரர் சசிகிரண் 23வது இடத்துக்கு முன்னேறினார். மற்ற இந்திய வீரர்கள் சேதுராமன் 31, அபிஜீத் குப்தா 32 வது இடத்தை பெற்றுள்ளனர். ஹரிகா துரோணவல்லி 76வது இடத்தில் உள்ளார்.