சத்துணவுத் துறையில் அமைப்பாளர், உதவியாளர் பணியிடங்களை நிரப்புவது குறித்து, ஊரக தொழில் துறை அமைச்சர் சம்பத், சேலத்தில், எட்டு மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்களுடன், ரகசிய ஆய்வுக் கூட்டம் நடத்தினார். தமிழகம் முழுவதும், சத்துணவு அமைப்பாளர், சமையலர், உதவியாளர் உள்ளிட்ட 16 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்புவதற்கு, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். கடந்த 5ம் தேதி முதல், அனைத்து மாவட்டங்களிலும், பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. தி.மு.க., ஆட்சியில், மொத்தமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அதன்பின் பரிந்துரை அடிப்படையில் பெரும்பாலான காலியிடம் நிரப்பப்பட்டது.
பதவிக்கு பணம்... : தற்போதைய ஆட்சியில், இன சுழற்சி அடிப்படையில் நிரப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு வட்டாரத்திலும் எஸ்.சி., எஸ்.டி., பி.சி., எம்.பி.சி., விதவையர் உள்ளிட்டவற்றின்படி காலியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும், ஆளும்கட்சியினர் மூலமே, பணியிடம் நிரப்பப்படுவதால், அக்கட்சியின் ஒன்றிய, நகர செயலர்களிடம் பணத்தை கொடுத்து, பணியிடத்தை பெறுவதற்கு, பெண்கள் பலர் காத்துக் கிடக்கின்றனர்.
இந்நிலையில், தமிழக ஊரக தொழில் துறை மற்றும் சத்துணவு அமைச்சர் சம்பத், நேற்று சேலம் வந்தார். ஐந்து ரோடு பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கியிருந்த அவருடன், ஆலோசனை நடத்த, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) அனைவரும் அழைக்கப்பட்டிருந்தனர்.
ஓட்டலில் ஆலோசனை: நேற்று மாலை, 5.30 மணியளவில், அவர் தங்கியிருந்தஓட்டலில், சத்துணவு பணியிடம் நிரப்புவது குறித்த, ரகசிய கூட்டம் நடந்தது. அதில், சத்துணவு திட்டத்துக்கு ஒதுக்கப்படும் பொருட்கள், சரியான முறையில், மாணவ - மாணவியருக்கு வழங்கப்பட வேண்டும். நோய் தாக்கும் வகையிலான காய்கறி, முட்டை உள்ளிட்டவற்றை வழங்கக் கூடாது என, எச்சரிக்கை விடுத்தார். காலிப்பணியிட விவரம் குறித்த தகவலையும், மாவட்ட வாரியாக கேட்டறிந்ததோடு, அது நிரப்புவது தொடர்பான அறிவுரைகளையும் வழங்கினார். தொடர்ந்து, அ.தி.மு.க.,வினர் பலர், சத்துணவு பணிக்கு வாய்ப்பு வழங்கும்படி, பெண்களை அழைத்து வந்து, அமைச்சரை முற்றுகையிட்டனர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
சத்துணவு பணியிடங்கள் நிரப்ப ரகசிய கூட்டம் : முற்றுகையில் சிக்கிய அமைச்சர்
தினமலர் – ஞா, 24 ஜூன், 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம் 20-6-2013
16 புகைப்படங்கள் - 5 மணிநேரம் முன்தமிழகம் 20-6-2013
26 புகைப்படங்கள் - 5 மணிநேரம் முன்பொது 20-6-2013
25 புகைப்படங்கள் - 5 மணிநேரம் முன்சம்பவம் 20-6-2013
11 புகைப்படங்கள் - 5 மணிநேரம் முன்அரசியல் 20-6-2013
20 புகைப்படங்கள் - 5 மணிநேரம் முன்
தொடர்புடைய செய்திகள்
- முடிவு என்ன?: தே.மு.தி.க. ஆலோசனை …
- "மாமூல்' பட்டியலில் உளவுப்பிரிவு …
- ஐ.சி.சி., கூட்டம்: சீனிவாசன் …
- உணவு பாதுகாப்பு மசோதா குறித்த மத்திய …
- 5,566 இடங்களை நிரப்ப குரூப்-4 தேர்வு …
- சொத்து குவிப்பு அறிக்கையால் அதிர்ந்தார் …
- அ.தி.மு.க.,வின் ராஜ்யசபா வேட்பாளர்கள் …
- பி.சி.சி.ஐ. கூட்டம் மாஜி செயலர் …
- வெற்றி வாய்ப்பை எதிர்பார்த்து தான் தி.மு.க., …
- "மாஜி' அமைச்சர் பன்சாலை விசாரிக்க …
- மத்திய அரசை கண்டித்து அ.தி.மு.க., …
- விஜயகாந்திடம் தே.மு.தி.க., நிர்வாகிகள் …
- "மாவோயிஸ்ட் பிரச்னை பற்றி விவாதிக்க …
- தி.மு.க.,வின் "மெகா கூட்டணி' கனவு …
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
தேசிய விருது தான் என்னை பாலிவுட்டுக்கு கொண்டு சென்றது! தனுஷ்
தினமலர் - 41 நிமிடங்கள் முன்பி.வாசு படத்தில் சோனம் கபூர் நடிக்கவில்லையாம்!
தினமலர் - 52 நிமிடங்கள் முன்வேட்பு மனுவை யாரும் வாபஸ் பெறாததால்: போட்டி உறுதி
தினமலர் - 56 நிமிடங்கள் முன்வெள்ள மீட்பு பணியில் தாமதம் கூடாது: உத்தர்கண்ட் அரசு - மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு
தினமலர் - 1 மணிநேரம் 7 நிமிடங்கள் முன்ரூபாய் வீழ்ச்சியை தடுக்க ரிசர்வ் வங்கி தீயா வேலை செய்கிறது - அலுவாலியா
தினமலர் - 1 மணிநேரம் 19 நிமிடங்கள் முன்
