தேடல்

சாத்தான்குளத்தில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பேரணி

சாத்தான்குளம்: சாத்தான்குளம் டவுன் பஞ்.,ம ற்றும் முதலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பேரணி நடந்தது.

பேரணிக்கு சாத்தான்குளம் டவுன் பஞ்.,தலைவர் ஜோசப் தலைமை வகித்து கொடியசைத்து துவக்கி வைத்தார். வட்டார மருத்துவ அலுவலர் சுவிட்லின் சசிதா, பள்ளி தலைமையாசிரியர் தனபாலன் சத்தியசிகாமணி, மருத்துவ அலுவலர் அலிஸ்பிரிசில்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுகாதார ஆய்வாளர் கிறிஸ்டோபர் செல்வதாஸ் வரவேற்றார்.

பள்ளி மாணவ, மாணவிகள் பங்கு பெற்ற பேரணி பள்ளி முன்பிருந்து துவங்கி காமராஜர் சிலை வரை நடந்தது. இதில் டெங்கு காய்ச்சலை தடுக்கும் முறைகள் குறித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.இதில டவுன் பஞ்.,துணைத் தலைவர் வீரக்குமார், கவுன்சிலர்கள் சதாசிவன், சரவணன், முகம்மது இஸ்மாயில், எழுத்தர் சார்லஸ், ஆசிரிய, ஆசிரியைகள், கிராம சுகாதார செவிலியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். சுகாதார ஆய்வாளர் ஜோசப் நன்றி கூறினார்.

மிகவும் பிரபலமான புகைப்படங்கள்