தேடல்

ஜனாதிபதி தேர்தலில் பிரணாபுக்கு மனித நேய மக்கள் கட்சி ஆதரவு

ஓசூர்: ஜனாதிபதி தேர்தலில், மனித நேய மக்கள் கட்சி காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு கொடுக்கும், என, அக்கட்சியின் மாநில பொது செயலாளர் தமிமூன் அன்சாரி தெரிவித்தார்.
ஓசூரில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து, கடந்த 3ம் தேதிகட்சியின் மாநில கூட்டத்தில் நிர்வாகிகள் கூடி விவாதித்தோம். காங்கிரஸ் கட்சி தங்கள் வேட்பாளர் பிரணாப் முகர்ஜியை ஆதரிக்க முறையாக ஆதரவு கேட்டு எங்களை அணுகினர். மேலும், காங்கிரஸ் கட்சியின் மத சார்ப்பின்மை, நீண்ட நெடிய அரசியல் பின்னணி ஆகியவற்றை கருத்தில் கொண்டு, காங்கிரஸ் வேட்பாளர் பிரணாப் முகர்ஜியை ஆதரிக்க முடிவு செய்துள்ளோம். எங்கள் கட்சியின், இரு எம்.எல்.ஏ., க்களும் பிரணாப் முகர்ஜிக்கு ஓட்டு போடுவர்.சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., வுடன் தேர்தல் ஒப்பந்தம் மட்டும் போட்டு போட்டியிட்டோம். மற்ற படி தற்போது, நாங்கள் அ.தி.மு.க., கூட்டணியில் இல்லை.இவ்வாறு கூறினார்.