டோக்கியோ:ஜப்பானில் மீண்டும் பலத்த மழை பெய்துள்ளதால், பலியானோரின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது.ஜப்பானில் கியூஷூ தீவில், கடந்த வாரம் முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், குமாமோட்டோ மாகாணத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் சூழ்ந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக மழையின் வேகம் குறைந்திருந்ததால் மீட்புப் பணிகள் துவக்கப்பட்டன.
ஆனால், நேற்று மீண்டும் பலத்த மழை பெய்தது. இதனால், ஆறுகளின் கரைகளில் உடைப்பு ஏற்பட்டு, வீடுகள் மற்றும் விளைநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.கியூஷூ தீவில் மட்டும் நான்கு லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் சிக்கிய வீடுகளில் உள்ள முதியவர்கள், ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்படுகின்றனர். ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டவர்களைத் தேடும் பணியில் கடற்படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.குமாமோட்டோ மாகாணத்தில் உள்ள எரிமலையின் அடிவாரத்தில் உள்ள அசோ என்ற இடத்தில், 81.7 செ.மீ., அளவுக்கு மழை அளவு பதிவாகியுள்ளது.இதுவரை 32 பேர், பலத்த மழைக்கு பலியாகியுள்ளனர்.
ஜப்பானில் பலத்த மழை :பலி எண்ணிக்கை உயர்வு
தினமலர் – தி, 16 ஜூலை, 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
சம்பவம் 24-5-2013
15 புகைப்படங்கள் - 2 நிமிடங்கள் 24 வினாடிகள் முன்அரசியல் 24-5-2013
17 புகைப்படங்கள் - 8 நிமிடங்கள் முன்உதய் கிரண்
4 புகைப்படங்கள் - 21 மணிநேரம் முன்ஸ்ருதிஹாசன்
8 புகைப்படங்கள் - 21 மணிநேரம் முன்காவ்யா ஷெட்டி
4 புகைப்படங்கள் - 21 மணிநேரம் முன்
தொடர்புடைய செய்திகள்
- கட்டட விபத்து : பலி எண்ணிக்கை …
- ஈராக் கார் குண்டுதாக்குதல்: 57 பேர் …
- தொலைத்தொடர்பு சந்தாதாரர் எண்ணிக்கை …
- வங்கதேச வணிக வளாக பலி 700ஆக …
- பொறியியல் கல்லூரிகளில் லட்சம் "சீட்' …
- ஒடிசாவில் கரடி தாக்கியதில் எட்டு …
- சூடு பிடிக்கிறது சூதாட்ட விசாரணை …
- மழை பெய்ய வேண்டி நூதனம் கிராமத்தை …
- ஐந்து ஆண்டில் மதுபான வருவாய் இரண்டு …
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
ஆசிய கால்பந்து:இந்தியா மீண்டும் தோல்வி
தினமலர் - 41 நிமிடங்கள் முன்நீச்சல் குளத்தில் வழுக்கி விழுந்த ஸ்ருதிஹாசன்!
தினமலர் - 57 நிமிடங்கள் முன்இந்திய ஜூனியர் கிரிக்கெட் அணி : முத்தரப்பு தொடரில் பங்கேற்பு
தினமலர் - 1 மணிநேரம் 2 நிமிடங்கள் முன்மழை பெய்ய வேண்டி நூதனம்: கிராமத்தை காலி செய்து வனவாசம்
தினமலர் - 1 மணிநேரம் 6 நிமிடங்கள் முன்வடிவீஸ்வரம் அழகம்மன் கோயிலில் புதிய கோபுரபணி இன்று தொடக்கம்
தினமலர் - 1 மணிநேரம் 7 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான புகைப்படங்கள்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
