புதுடில்லி : சென்ற ஜனவரி மாத நிலவரப்படி, நாட்டில் ஜி.எஸ்.எம். மொபைல் போன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, 64.80 @காடியாக அதிகரித்துள்ளது என, இந்திய மொபைல் போன் சேவை நிறுவனங்களின் கூட்டமைப்பு (சி.ஓ.ஏ.ஐ.) தெரிவித்துள்ளது. சென்ற ஜனவரியில், புதிதாக 84 லட்சத்து 40 ஆயிரம் பேர், ஜி.எஸ்.எம்., மொபைல் போன் சேவையை பெற்றுள்ளனர்.
பார்தி ஏர்டெல் : இதே மாதத்தில், தொலைத்தொடர்பு துறையில் முன்னிலையில் உள்ள, பார்தி ஏர்டெல் நிறுவனம், 13 லட்சத்து 1,023 புதிய வாடிக்கையாளர்களை இணைத்துக் கொண்டது. இது, டிசம்பரை விட, 0.55 சதவீதம் அதிகம். இதையடுத்து, இந்நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை, 17 கோடியே 69 லட்சத்து 54 ஆயிரத்து 165 ஆக உயர்ந்துள்ளது. மதிப்பீட்டு காலத்தில், வோடபோன் எஸ்ஸார் நிறுவனம், 8 லட்சத்து 55 ஆயிரத்து 349 புதிய வாடிக்கையாளர்களை இணைத்துள்ளது. இது, நவம்பரை விட, 0.58 உயர்வு. இதன் மூலம், இந்நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை, 14 கோடியே 60 லட்சத்து 2,105 ஆக அதிகரித்துள்ளது.
ஐடியா செல்லுலார் : ஆதித்ய பிர்லா குழுமத்தைச் சேர்ந்த ஐடியா செல்லுலார் நிறுவனம், 17 லட்சத்து 47 ஆயிரத்து 169 புதிய வாடிக்கையாளர்களை இணைத்துக் கொண்டுள்ளது. இதன் மூலம், இந்நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை, 10 கோடியே 81 லட்சத்து 27 ஆயிரத்து 280 ஆக அதிகரித்துள்ளது. இந்நிறுவனத்தின் சந்தை பங்களிப்பு, 16.68 சதவீதம் என்றளவில் உள்ளது.
பொதுத் துறையைச் சேர்ந்த பீ.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். ஆகிய நிறுவனங்கள் முறையே, 8 லட்சத்து 60 ஆயிரத்து 846 மற்றும் 50 ஆயிரத்து 180 புதிய வாடிக்கையாளர்களை இணைத்துள்ளன. இதையடுத்து, இந்நிறுவனங்களின் மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை முறையே, 9 கோடியே 34 லட்சத்து 26 ஆயிரத்து 223 மற்றும் 54 லட்சத்து 92 ஆயிரத்து 222 என்றளவில் உள்ளது.
சென்ற ஜனவரியில், ஏர்செல் நிறுவனம், 8 லட்சத்து 17 ஆயிரத்து 710 புதிய வாடிக்கையாளர்களை இணைத்துக் கொண்டது. இதன் மூலம், இந்நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை, 6 கோடியே 24 லட்சத்து 62 ஆயிரத்து 121 ஆக உயர்ந்துள்ளது.
யூனிநார் நிறுவனம், 24 லட்சத்து 91 ஆயிரத்து 511 புதிய வாடிக்கையாளர்களை இணைத்துள்ளது. இதன் மூலம், இந்நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை, 3 கோடியே 87 லட்சத்து 98 ஆயிரத்து 376 ஆக உயர்ந்துள்ளது.
வீடியோகான் நிறுவனம், 4 லட்சத்து 5,846 புதிய வாடிக்கையாளர்களை இணைத்துள்ளது. இதன் மூலம், இந்நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை, 58 லட்சத்து 48 ஆயிரத்து 729 ஆக உயர்ந்துள்ளது.
லூப் மொபைல் : லூப் மொபைல் நிறுவனம், 10 ஆயிரத்து 395 புதிய வாடிக்கையாளர்களை இணைத்துக் கொண்டதன் மூலம் அதன் மொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, 32 லட்சத்து 46 ஆயிரத்து 776 ஆக அதிகரித்துள்ளது. எடிசலாட் நிறுவனம், 22 ஆயிரத்து 58 புதிய வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. இதையடுத்து, இதன் மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை, 16 லட்சத்து 92 ஆயிரத்து 673 ஆக உயர்ந்துள்ளது.
அதேநேரத்தில், எஸ்டெல் நிறுவனம், 1 லட்சத்து 19 ஆயிரத்து 93 வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. இதையடுத்து, இந்நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை, 34 லட்சத்து 30 ஆயிரத்து 288 ஆக குறைந்துள்ளது.
ஜனவரியில் ஜி.எஸ்.எம். மொபைல் போன் நிறுவனங்களின் சந்தை பங்களிப்பு (வளர்ச்சி %)
பார்தி ஏர்டெல் : 27.30
வோடபோன் : 22.93
ஐடியா : 16.68
பீ.எஸ்.என்.எல். : 14.42
ஏர்செல் : 9.64
யூனிநார் : 5.99
